இந்த 6 Dark Psychology தந்திரங்களிடமிருந்து ஜாக்கிரதை! 

Dark Psychology
Beware of these 6 Dark Psychology Tricks!
Published on

மனிதர்களின் மனம் மிகவும் சிக்கலானது. நம் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை பல்வேறு விதமான காரணிகள் பாதிக்கின்றன. சில நேரங்களில் இந்த காரணிகள் நமக்கு தெரியாமலேயே நம்மை கையாள பயன்படுத்தப்படலாம். இந்தப் பதிவில் உங்களுக்கு எதிராக பிறர் பயன்படுத்தக்கூடிய 6 Dark Psychology தந்திரங்களைப் பற்றி பார்ப்போம். 

Reverse Psychology: இது ஒரு நபர் தற்போது செய்ய விரும்பும் விஷயத்தை, உங்களுக்கு அதில் விருப்பமில்லை என்று சொல்வதன் மூலம் அவர்களை செய்யாமல் தடுக்கும் தந்திரமாகும். உதாரணத்திற்கு ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையிடம், “நீங்கள் இப்போது தூங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லி அவர்களின் தூக்கத்தை தாமதப்படுத்துவதைப் போல் ஆகும். 

Love Bombing: இது ஒரு நபரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, அதிக அளவிலான அன்பு மற்றும் பாசத்தை வழங்கி, மனநிலையை மாற்றும் தந்திரமாகும். இந்த தந்திரம் ஒரு நபர் மற்ற நபரை அளவுக்கு அதிகமாக நம்பி, அவர்களை சார்ந்து இருக்க வைக்கும். 

Social Engineering: இது ஒரு நபருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் தந்திரமாகும். இணையத்தில் நடக்கும் பல மோசடி வேலைகள் இப்படித்தான் நடக்கிறது. அதாவது, ஒருவருக்கு தேவையான விஷயங்கள் கிடைக்கும் படி ஆசை வார்த்தை கூறி, அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று ஏமாற்றும் தந்திரம், இந்த சைக்காலஜி அடிப்படையில் வருகிறது. 

Manipulative Persuasion: இது ஒரு நபரின் உணர்ச்சிகளை, எண்ணங்களை அல்லது நடத்தைகளை தங்களின் சொந்த நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தந்திரம். இது பயம், குற்ற உணர்வு, அச்சுறுத்துதல் அல்லது தவறான தகவல்கள் போன்றவற்றை முன்னுதாரணமாகக் காட்டி செய்யப்படலாம். 

Gaslighting: இது ஒரு நபரின் எதார்த்த உணர்வை சந்தேகிக்க வைத்து அவர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் தந்திரம். இது ஒரு நபரின் நம்பிக்கை, உணர்வுகள், கருத்துக்கள் போன்றவற்றை தவறு என நம்ப வைத்து, அவர்களின் மனநிலையை முற்றிலுமாக மாற்றும் ஒரு சைக்காலஜி தந்திரம் ஆகும். 

இதையும் படியுங்கள்:
ஒருவரைப் பார்த்ததும் அவர்களைப் பற்றி கண்டுபிடிக்கும் சைக்காலஜி தந்திரங்கள்!
Dark Psychology

Guilt Trapping: இது ஒரு நபரை குற்ற உணர்வடைய வைப்பதன் மூலம் தான் விரும்பும் விஷயங்களை செய்ய வைக்க பயன்படுத்தும் சைக்காலஜி தந்திரம். உதாரணத்திற்கு, “நீங்கள் இதை எனக்காக செய்யவில்லை என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன்” என சொல்லி அவர்களை கவலை அடையச்செய்து தங்களது தேவையை சிலர் நிறைவேற்றிக் கொள்கின்றனர். 

இதுபோன்ற Dark Psychology தந்திரங்களிடமிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இவற்றை உங்களுக்கு எதிராக பயன்படுத்தி, உங்களை தவறான விஷயங்களுக்கு சிலர் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே, மேலே குறிப்பிட்டுள்ளது போல யாராவது உங்களை பயன்படுத்திக்கொள்ள நினைத்தால், உடனடியாக அவர்களிடம் இருந்து விலகி உங்களை பாதுகாத்துக்கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com