ஒருவரைப் பார்த்ததும் அவர்களைப் பற்றி கண்டுபிடிக்கும் சைக்காலஜி தந்திரங்கள்!

Psychology tricks
Psychology tricks to find out about someone when you see them!

மனிதர்களை சமூக விலங்கு என்பார்கள். மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதும், அவர்களைப் பற்றி புரிந்து கொள்வதும் நமது இயல்பான குணம். நாம் ஒருவரை முதல் முறையாக சந்திக்கும்போது அவர்களைப் பற்றிய தகவல்களை விரைவாக சேகரிக்க முயற்சி செய்கிறோம். இந்தப் பதிவில் ஒருவரைப் பார்த்ததும் அவர்களைப் பற்றி கண்டுபிடிக்க உதவும் சில சைக்காலஜி தந்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

முக பாவனைகளை கவனிக்கவும்: முக பாவனைகள் மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கருவி. ஒருவரின் முகத்தை கவனமாக பார்க்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, சோகமாக இருக்கிறார்களா, கோபமாக இருக்கிறார்களா அல்லது வேறு ஏதாவது உணர்ச்சியை அனுபவிக்கிறார்களா என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

உடல் மொழியைப் படிக்கவும்: உடல் மொழி என்பது மனிதர்கள் தொடர்பு கொள்ளும் மற்றொரு முக்கிய வழி. ஒருவரின் தோரணை கைகள் மற்றும் கால்களின் அசைவுகள், மற்றும் ஐ கம்யூனிகேஷன் போன்றவற்றைப் பார்ப்பதன் மூலம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் மற்றும் எப்படி உணர்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். 

பேசும் முறையை கவனிக்கவும்: ஒருவர் எப்படி பேசுகிறார் என்பதை வைத்து அவரின் ஆளுமை, கல்வி நிலை மற்றும் சமூகநிலை போன்றவற்றை ஓரளவுக்கு கணிக்க முடியும். எனவே பிறர் பேசும் விதத்தை நன்கு கவனிக்கவும். அதேபோல உங்களைப் பிறர் சிறப்பாக நினைப்பதற்கு நன்றாக பேசும் கலையை கற்றுக் கொள்ளுங்கள். 

ஆடை மற்றும் அணிகலன்களை கவனிக்கவும்: மக்கள் தங்களை வெளிப்படுத்த ஆடை மற்றும் அணிகலன்களை பயன்படுத்துகிறார்கள். ஒருவரின் ஆடை மற்றும் அணிகலன்களின் வகையைப் பொறுத்து அவர்களின் ஆர்வம், மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பற்றிய தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம். 

அவர்கள் இருக்கும் சூழலை கவனியுங்கள்: ஒருவர் எங்கு இருக்கிறார், யாருடன் பழகுகிறார் என்பதை வைத்து அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பெற முடியும். அதாவது அவர்கள் எந்த கூட்டத்துடன் பழகுகிறார்களோ, அதுசார்ந்த மனநிலை, நிலைபாடு மற்றும் கருத்துக்களுடன் அவர்கள் ஒன்றி இருப்பார்கள் என அர்த்தம். 

இதையும் படியுங்கள்:
உலகில் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தால் என்ன ஆகும்? 
Psychology tricks

இதுபோன்ற சில சைக்காலஜி தந்திரங்களைப் பயன்படுத்தி, ஒரு நபரை பார்த்த உடனேயே அவர்களைப்பற்றி நம்மால் ஓரளவுக்கு கணிக்க முடியும். இத்தகைய தந்திரங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். ஒருவரைப் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு முன் அவர்களைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். 

மேலே குறிப்பிட்டது போல அனைவருமே ஒரே மாதிரி நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோன்ற தந்திரங்கள் எப்போதும் துல்லியமானதாக இருக்காது. ஒருவரைப் பற்றி அறிய விரும்பினால் அவர்களிடமே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. 

Never Judge a Book By its Cover! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com