
மனிதராய் பிறந்த அனைவருக்கும் நற்குணங்கள், நற் சிந்தனைகள் போன்றவை தானாக வந்துவிடாது. பெரியோர்கள், நமக்கு முன் வெற்றிகரமாக வாழ்ந்து முடித்தவர்கள், எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்ட சில குறிப்புகளை (Quotes) விட்டுச் சென்றுள்ளனர். அதில் மகாகவி பாரதியாரின் மேற்கோள்களிலிருந்து இருபதை தேர்ந்தெடுத்து இப்பதிவில் கொடுத்துள்ளதைப் பார்க்கலாம்.
1.எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு
எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு
எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.
2.ஆழ்ந்த நினைப்பு அசையாத நினைப்பு
வலிய நினைப்பு மாறாத நினைப்பு
உலகம் அறியத்தக்க வெளி உண்மையாக மாறிவிடும்.
3.விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக
இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப்
பார்க்கவே எவனும் பயப்படுவான்.
4.சொல்வது தெளிந்து சொல்
செய்வது துணிந்து செய்.
5.காயங்கள் குணமாக காலம் காத்திரு
கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு.
6.உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால்
நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்.
7.மலையைப் பார்த்து வியந்துவிடாதே
மலை மீது ஏறினால் அதுவும் உன் காலின் கீழ்தான்
சில வெற்றிகளும் கூட…
8.விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை..
விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.
8.மனதில் உறுதி வேண்டும்.
9.உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்னைகள் வரும்போது அல்ல
பிரச்னைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது.
10.எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்.
11.யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்.
12.இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள
வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் உயர்ந்தது
பொறுமை.
13.எப்போதும் கர்வத்தோடு இரு
இங்கே யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
14.கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே
செல்வம் பிறர்க்கு நாம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்தோறும் மிகச் சேரும்.
15.திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
16.உழைத்து வாழ்வதுதான் சுகம்
வறுமை, நோய் போன்றவை
உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.
17.சென்றதை சிந்திப்பதை விட இனிமேல்
நடக்க இருப்பதை சிந்திப்பவனே புத்திசாலி.
18.துன்பம் வரும்போது அதைக் கண்டு சிரிக்கப் பழகு
அதுவே அத் துன்பத்தை வெட்டும் வாளாகிவிடும்.
19.வாக்கினிலே இனிமை வேண்டும்.
20. மன உறுதி இல்லாதவனுடையை உள்ளம்
குழம்பிய கடலுக்கு சமம்.