பிறந்தநாள் ஸ்பெஷல்: எழுத்தாளர் சுஜாத்தாவின் ஆகச்சிறந்த 15 மேற்கோள்கள்!

Sujatha
Sujatha

1953ம் ஆண்டு சுஜாதாவின் முதல் கதை பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன்பின்னர் ஏராளமான புதினங்கள்,  கதைகள், சிறுகதைகள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் தனது கருத்துக்களால் மக்களின் மனதில் இடம்பிடித்தார், சுஜாதா. பொறியியலாளர் மற்றும் எழுத்தாளராக விளங்கிய சுஜாதா திரைப்பட எழுத்தாளராகவும் வலம்வந்தார். அவருடைய பிறந்தநாளான இன்று, அவரின் சில சிறந்த மேற்கோள்களைப் பார்ப்போம்.

1.  ஒருவனின் வேதனை, மற்றவனின் சுகமாகிறது.

2.  அறியாமை தான் பயம்! பயம்தான் பாதித் தோல்விக்குக் காரணம்.

3.  உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது!

4.  கவனிப்பது என்பது உடல் நிலையையும், மன நிலையையும் பொறுத்தது.

5.  ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல.

6.  ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனசாட்சி உறுத்தாமல். 

7.   நான்கு பக்கமாவது ஒரு நாளைக்கு பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால், கதை, சினிமா, காதல் இல்லாதவை.

8.  அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒரு மாறுதலுக்கு அவர்கள் சொல்வதை செய்துப் பாருங்கள்.

9.  வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும்.

10.  இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு  முக்கியம்.

இதையும் படியுங்கள்:
அவமானமும் ஒரு மூலதனம்தான்!
Sujatha

11. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடுங்கள். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத் தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

12. அலட்சியப்படுத்தினால் விலகி நில், ஆத்திரப்பட்டுவிடாதே. அன்பு செய்தால், நன்றி சொல். நன்றியுணர்வு உன்னை பெரியவனாக்கும்.

13. கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை.

14. நம் நிஜமான எதிரி ஏழ்மை. நிஜமான நண்பன் திறமை.

15. நாம தப்பு பண்ணிட்டோமா?, இல்லை கொஞ்சம் தைரியமாக இருந்துட்டோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com