தோற்றுப் போவது தவறில்லை! தோல்வியில் இருந்து பாடம் கற்று ஜெயிக்கப் போவது எப்படி?

விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து ஓட வைக்கும் உத்வேகக் குறிப்புகள்!
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கைAI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வாழ்க்கையில் தோல்வி என்பது முடிவல்ல, முன்னேற்றத்திற்கான தற்காலிக நிறுத்தம் மட்டுமே என இந்த கட்டுரை வலியுறுத்துகிறது. விழுந்து எழும் ஒவ்வொரு அனுபவமும் நம் திறனை மேம்படுத்தும் ஆசிரியராக செயல்படுகிறது. இலக்கை மாற்றாமல், அதை அடையும் திட்டத்தை மாற்றி தொடர்ந்து முயற்சி செய்வதே உண்மையான வெற்றி என தன்னம்பிக்கை, விடாமுயற்சி முக்கியத்துவம் விளக்கப்படுகிறது.

தோற்றுப்போவது மட்டும் தோல்வி அல்ல அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதும் உண்மையான தோல்விதான்.

தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதானே தவிர அதுவே முடிவல்ல. தோல்வி என்பது நம் திறனை மேம்படுத்தவே உதவுகிறது. சிறந்த உந்து சக்தியாக உள்ளது. வாழ்வில் எப்படியும் ஜெயித்தே தீரவேண்டும் என்ற உறுதியான எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

ஒவ்வொரு தோல்வியும் நாம் செய்த தவறுகள் என்ன என்பதை உணர்த்தி, அடுத்த முறை அதைச் செய்யாமல் சிறப்பாக செயல்பட உதவும் ஒரு சிறந்த ஆசிரியராகத்தான் இருக்கிறது.

சிலர் தோல்வி வந்தாலே மனம் தளர்ந்து முயற்சி செய்வதை நிறுத்திவிடுகின்றனர். ஆனால் உண்மையான வெற்றி என்பது தோல்வியைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்து, அந்த முயற்சியின் விளைவாக தோல்வியை தோற்கடித்து வெற்றியை நிலை நாட்டுவதே. தோல்வி என்பது நம் மீது உள்ள நம்பிக்கை குறைவால் மட்டுமே ஏற்படுகிறது. தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே வாழ்வில் எந்த இலக்கை நோக்கியும் தங்கு தடையின்றி முன்னேறிச் சென்று வெற்றிபெற முடியும். வெற்றியை வரவேற்க தோல்வி என்பது அவசியம்.

தன்னம்பிக்கை
தன்னம்பிக்கைAI image

திறமை மூலம் வெற்றி பெற்றவர்களை விட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறியவர்களே வாழ்வில் அதிக வெற்றிகளை அடைந்துள்ளனர். தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தை வெல்வதே வெற்றிக்கான முதல் படியாகும். எடுக்கும் முயற்சிகளில் தோற்றுப்போவது மட்டும் தோல்வி அல்ல; முயற்சிகளை கைவிடுவதே உண்மையான தோல்வி ஆகும்.

ஒரு இலக்கை நிர்ணயித்து அதில் எதிர்ப்படும் சவால்களைக் கண்டு பயந்து பாதியில் கைவிடுவது, அந்த இலக்கை விட்டு விலகுவதுதான் உண்மையான தோல்வி.

இதையும் படியுங்கள்:
சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!
தன்னம்பிக்கை

தவறுகளில் இருந்து பாடம் படிக்காமல் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வது, முக்கியமாக நம்முடைய திறமை மீது நமக்கே நம்பிக்கை இல்லாமல் போவது தான் உண்மையான தோல்வி.வாழ்க்கையில் தடைகளும் ஏமாற்றங்களும் ஏற்படுவது இயல்பானவைதான். அவற்றை நாம் எப்படி எதிர்க்கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி அடங்கியுள்ளது.

வீழ்ச்சியை வெற்றியாக மாற்றுவது எப்படி?

ஒவ்வொரு பின்னடைவும் நமக்கு ஒரு புதிய பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனை தோல்வியாக எண்ணி துவண்டுவிடாமல் ஒரு சிறந்த அனுபவமாக கருதி அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

இலக்கை மாற்றவேண்டாம். அதை நிறைவேற்றுவதற்காக போடும் திட்டத்தை மட்டும் மாற்றிவிடலாம். அதாவது அந்த இலக்கை அடையும் வழியை மட்டும் மாற்றி யோசித்து செயல்படலாம்.

விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து ஓடுவதே சாதனையாளர்களின் ரகசியம். எனவே விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்பட்டு தோல்வியை தோல்வியுறச் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் இலக்கை அடைய இதுதான் ஒரே வழி!
தன்னம்பிக்கை

தோல்வி என்பது ஒரு தற்காலிகமான நிறுத்தமே தவிர அது நம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு அல்ல. அது நாம் அடுத்த முறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான சிறந்த வழிகாட்டி.

தோல்வி ஒரு முறை அல்ல எத்தனை முறை வந்தாலும் அடுத்து என்ன என்று யோசிக்க மனதைப் பழக்க வேண்டும். தோல்விக்கு அடிநாதமாக இருக்கும் காரணங்களை ஆராய வேண்டும். அவை நமது நோக்கங்களை சரி செய்துகொள்ள உதவும்.

தோல்வியை ஏற்று முன்னேறும் பொழுது சரித்திரம் படைக்கும் சக்தி, ஆற்றல் எல்லாம் கிடைத்துவிடும். தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனதிற்கு வெற்றியைக் கொண்டாடத் தெரியாது.

தோல்வி குறித்த பயத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைச் சரியாக ஆராய்ந்து, இலக்குகளை நோக்கிய பாதையைச் சாதுரியமாக மாற்றியமைத்து வெற்றி பாதையில் பயணிப்பீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com