பதிலடியில் தெறித்த வீரம்!

ஜவஹர்லால் நேரு...
ஜவஹர்லால் நேரு...
Published on

ருமுறை எனது தோழி மாங்கொட்டைகளை காயவைத்து அந்த பருப்பை எடுத்து பயன்படுத்தினாள். அதேபோல் மருத்துவத்திற்காக நாவல் கொட்டை களையும் பயன்படுத்தினார். மூன்றாவது முறையாக வேப்பங்கொழுந்தைப் பறித்துக் கொண்டிருக்கும்போது,

அதை கவனித்த ஒருவர், என்ன மாம்பழத்தோட மாங்கொட்டை நாவல் பழத்தோடு நாவல் பழகோட்டையை சாப்பிடுவது போல் வேப்பம் கொழுந்துடன் வேப்பங் கொட்டையையும் சேர்த்து சாப்பிட போகிறாயா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு என் தோழி சிரித்துக்கொண்டே நீங்கள் வேண்டுமானால் ஒரு வேப்பம் கொட்டையை சாப்பிட்டு காட்டுங்கள். அதன் பிறகு நான் சாப்பிடுகிறேன் என்று இயல்பாக பதில் கூறுவது போல் சற்று துணிவைக் கூட்டி காட்டமாகவே பதிலடி கொடுத்தாள்.

கேட்டவருக்கு நாம் ஏன் கேட்டோம்? என்று ஆகிவிட்டது. சிலர் இப்படித்தான் எதையாவது ஏடாகூடமாக பேசிவிட்டு வாங்கிக்கட்டிக் கொள்வார்கள். இது போல் பேசுவதற்கு முன்பு நாம் பலமுறை யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் இது போன்ற கேள்விகளை கேட்க மாட்டோம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது சிறையில் இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரொட்டியில் மண் கலந்திருந்திருக்கிறது. இதைக் கண்ட நேரு மண்ணில்லாத ரொட்டி தான் வேண்டும் என்று சிறை அதிகாரியிடம் கேட்டிருக்கிறார். 

உடனே சிறை அதிகாரி ஏளனமாக இதுவும் உங்கள் தாய்மண் தானே! உங்களுக்குச் சுவையாகத்தான் இருக்கும் என்றாராம்.

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
ஜவஹர்லால் நேரு...

உடனே நேரு "நாங்கள் போராடுவது எங்கள் மண்ணை மீட்பதற்குத் தான். தின்பதற்கு அல்ல" என்று வீரம் பொங்க அதே நேரம் காட்டமாக பதில் கூறினாராம். இதைக் கேட்ட சிறை அதிகாரி வாயடைத்துப் போனாராம். 

ஆதலால் யார் எப்படி கேள்வி கேட்கிறார்களோ அதற்கு தக்கவாறு பதிலடி கொடுப்பது நமக்கு எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும். ja

நம்மை தவறாக நினைத்து விட்டார்களே என்று புலம்பாமல் நம்மை இவ்வளவுதான் புரிந்து வைத்திருக்கிறார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com