'பிஸியாக' இருப்பது மட்டுமே வெற்றியின் அடையாளமா?

How to Level Up Your Life
How to Level Up Your LifeAI Image
Published on

"என்னடா, பேசி ரொம்ப நாளாச்சு! அவ்வளவு பிஸியா?" என்று என் நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவன், "ஆமாம், ஒரே பிஸி!" என்று பதிலளித்தான். "அப்படி என்னதான் வேலை பார்த்தாய்?" எனக் கேட்டதற்கு, காலையிலிருந்து இரவு வரை அவன் செய்யக்கூடிய அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டுக் கூறினான்.

அன்றாட வேலைகளை மட்டும் ஒழுங்காகச் செய்வதன் மூலம் நாம் முன்னேறிவிட முடியுமா? 'பிஸியாக' இருப்பது மட்டுமே வெற்றியின் அடையாளமா? என்பது குறித்து விரிவாக இப்பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
தாழ்வு மனப்பான்மையில் துவண்டு போறீங்களா? Inferiority Complex எனும் அரக்கனை விரட்டியடிக்க ஈஸியான வழி!
How to Level Up Your Life

1. திறனை கூர்மைப்படுத்துதல்

பொதுவாக நம்முடைய சமூகத்தில், 'அதிகம் கஷ்டப்படுகிறவனே உழைப்பாளி; அவனே வெற்றி பெறுவான்' என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆனால், உண்மையில் சரியான திசையில் கஷ்டப்படுவதுதான் வெற்றிக்கான வழியாகும். முயற்சியை மட்டுமே நம்பியிருக்காமல், நமது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக: ஒரு தச்சு வேலை செய்பவர் மரத்தை வெட்டத் தொடங்கும் முன் தனது கோடாரியை கூர்மைப்படுத்திக் கொண்டால், பாதி நேரத்திலேயே வேலையை முடித்துவிடலாம். அந்த வகையில், நம்முடைய திறனே கோடாரியாக இருப்பதால், அதனைத் தொடர்ந்து கூர்மைப்படுத்த வேண்டும்.

2. "நேரமில்லை" என்பதை நீக்கிவிடுதல்

"நேரமில்லை" என்பது உண்மையில் ஒரு பொய்யான வாக்கியம். ஏனெனில், வெற்றி பெற்றவர்கள் மற்றும் வெற்றி பெறாதவர்கள் என அனைவரும் ஒரு நாளில் 24 மணி நேரத்திற்குள்தான் வாழ்கிறார்கள். ஒரு நாளில் வெறும் 30 நிமிடங்கள் மட்டும் நமது திறனை வளர்க்க அல்லது புதிய விஷயங்களைக் கற்கச் செலவிட்டாலே, ஒரு வருடத்தில் 182 மணி நேரங்களை நாம் முதலீடு செய்திருப்போம். இதுவே ஒருவரது வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய முதலீடாகும்.

இதையும் படியுங்கள்:
'கல்கி'யோடு Puzzle போடு! - இன்றைய புதிர் 07-04-2026
How to Level Up Your Life

3. "நாம் செய்வதுதான் சரி" என நினைக்காதீர்கள்

"மாற்றம் ஒன்றே மாறாதது" என்பதற்கேற்ப உலகம் தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று சரியாக இருந்த விஷயங்கள் இன்று பழையதாகி விடுகின்றன. யாராவது புதிய வழிகளைக் கூறும்போது, "இது எனக்குத் தெரியும், இப்படித்தான் செய்வார்கள்" என ஈகோ பார்ப்பது வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரி. அந்தப் பிடிவாதத்தை விட்டுவிட்டு, புதிய மாற்றங்களை மனதார ஏற்கப் பழகுவதே மிகப்பெரிய பலமாகும்.

4. முன்னேற்றம் (Improvement) - எதிர்காலத்திற்கான முதலீடு

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போதும், ஒரு புதிய முறையை (System) கையாளும் போதும் ஆரம்பத்தில் கஷ்டமாகத் தோன்றலாம். ஆனால், ஒருமுறை கஷ்டப்பட்டு அதைப் பழகிக்கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். இன்றைய சிறிய முதலீடு, நாளைய பெரிய லாபத்திற்கு வழிவகுக்கும். எனவே, முன்னேற்றத்தைச் சுமையாகக் கருதாமல் எதிர்காலத்திற்கான முதலீடாகக் கருத வேண்டும்.

5. ஒப்பீட்டை விட ஆய்வே சிறந்தது

"நம்மை விட அடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலி, நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது" எனப் பிறருடன் ஒப்பிட்டுப் பொறாமைப்படக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று 'ஆய்வு' செய்து, அதிலிருந்து கற்றுக்கொண்டால் வெற்றி பெறுவது எளிதாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
மனித வாழ்வு ஒரு வரம்!
How to Level Up Your Life

6. 'Comfort Zone' தேவையில்லை

பழகிய வழியே எப்போதும் பாதுகாப்பானது என நினைப்பது, நம்மை ஒரே இடத்தில் நிறுத்திவிடும். முன்னேற வேண்டும் எனில் நமது 'Comfort Zone'-ஐ விட்டு வெளியே வர வேண்டும். அசௌகரியங்களை (Discomfort) உற்ற தோழனாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம். "வலி இல்லாமல் வளர்ச்சி இல்லை" என்பதை மனதில் பதிக்க வேண்டும்.

அன்றாட வேலைகளை அற்புதமாகச் செய்தாலும், மேலே குறிப்பிட்ட மாற்றங்களையும் கடைபிடிக்கும்போதுதான் நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் உண்மையான உயர்வடைய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com