நாம் நாமாக இருக்க முடிகிறதா? சுயத்தை மீட்டு சுகம் காண்போம்!

Motivation Image
Motivation Imagepixabay.com

"Sometimes you have to step outside of the person you've been, and remember the person you were meant to be, the person you wanted to be, the person you are.
"சில சமயம் நீங்களாக இருக்கும் தளத்திலிருந்து வெளிவந்து, நீங்கள் யாராக இருந்திருக்க வேண்டும், நீங்கள் யாராக ஆக விரும்பினீர்கள் மற்றும் தற்போது நீங்கள் யாராக உள்ளீர்கள் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.” - H.G. Wells.

-ஆங்கில எழுத்தாளரின் இந்த மொழிகள் நமது வெற்றிக்கு மிகவும் அவசியமாகும்.

வர் ஒரு ஓவியர். பள்ளி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். குழந்தைகளிடம் தன்னம்பிக்கை மொழிகளை பேசிக்கொண்டே வந்தவர் இறுதியில், "நீங்கள் பின்னாளில் என்னவாக விரும்புகிறீர்கள்?" என்று வினவ, வரிசையாக பிள்ளைகள் அனைவரும் தங்கள் மனதில் இருப்பதைக் கூறினர். மருத்துவர்,  இன்ஜினியர், பைலட், என்றும் விதவிதமாக தங்கள் ஆசைகளை கூறினார்கள்.

அவர்களின் ஆசைகள் வெற்றியடைய வழிகளைக் கூறிக் கொண்டே வந்தவர் ஒரு பிள்ளை எழுந்து இடையில் குறிக்கிட்டாள்.

என்ன? என்று அவர் கேட்கையில்,

"நீங்கள் உங்கள் சிறு வயதில் என்னவாக விரும்பினீர்கள்? "என்று கேட்டாள் அந்த சிறுமி.

 இப்படிக்கேட்டதும் அவர் சிரித்துக் கொண்டே "நான் விரும்பியது நடந்தது. இப்போது நடந்து கொண்டிருப்பது எல்லாமே ஒன்றுதான். சிறு வயதில் புத்தகங்களை படிக்கும் பழக்கம் எனக்கு அதிகம். அதில் இருக்கும் ஓவியங்களை பார்த்து ரசிப்பேன். அப்படியே அதில் நாட்டம் கொண்டு நான் ஓவியராக வேண்டும் என்று எனது பள்ளி நாட்களிலேயே முடிவு செய்து விட்டேன். அதை நோக்கி சென்று இப்போது பிரபல ஓவியராகவும் உங்களிடம் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்ல பள்ளி குழந்தைகள் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர். ஆங்கில எழுத்தாளர் கூறியது போல அந்த ஓவியரின் எண்ணம், செயலில் இணைந்து வெற்றியாகிறது. ஆனால் நூற்றில் எத்தனை சதவீதம் பேருக்கு இப்படி அவர்கள் எண்ணிய எண்ணம் வெற்றியாகிறது? சில குறிப்பிட்ட சதவீதத்தை தவிர மற்றவர்கள் அவர்கள் மனதில் நினைப்பது ஒன்று ஆனால், அவர்கள் செய்யும் பணி வேறாகத்தான் இருக்கும்.  அதற்காக அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது அர்த்தமல்ல. அவர்கள் அந்த செயலில் எந்த அளவுக்கு மனப்பூர்வமாக ஈடுபடுகிறார்கள் என்பதே கேள்வி?

நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட பெண்ணை டாக்டராகும்படி வற்புறுத்தினர் அவளது பெற்றோர். அவர்களின் வற்புறுத்தலுக்காக மருத்துவப் படிப்பை முடித்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே மேலிருக்கும் இந்தக் கேள்விகளை கேட்டாள். பதில் வெற்றிடத்தைத் தர தன் சுயத்தை மீட்டெடுக்க நடனக் கல்லூரியில் சேர்ந்து நடனத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் வாங்கி மேடை நிகழ்ச்சிகளிலும் தேர்ந்த பயிற்சியாளராகவும் மனநிறைவுடன் தனக்குப் பிடித்த பணியை செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
எல்லாம் எந்திர மயம்!
Motivation Image

இவர் தனது மருத்துவப் பணியில் மனசோர்வுற்று, சற்றே நேரம் ஒதுக்கி தான் யார்? எண்ணியது நடந்ததா? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் போன்ற கேள்விகளைக் கேட்டு தெளிந்ததாலேயே சட்டென முடிவெடுத்து தன் சுயத்தை மீட்க முடிந்தது.

நாமும் நாம் செய்து கொண்டிருக்கும் பணியிலிருந்து சற்றே விலகி  நம்மைப் பற்றிய சுய அலசலை மேற்கொள்வோம். மனநிறைவுடன் நம் செயல்களில் வெற்றி நோக்கி பயணிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com