நம்பிக்கை மட்டும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?

நம்பிக்கை மட்டும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?
Published on

ம்முடைய வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்திக்கும்போது, நம் கையில் இருப்பது நம்பிக்கையாக மட்டுமே இருக்கும். ‘எல்லாமே நம் கையை விட்டுப் போனாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடக்கூடாது’ என்று சொல்வார்கள். அத்தகைய நம்பிக்கை நம் வாழ்வில் இருந்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியுமா? இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காணலாம்.

வியாபாரி ஒருவர் தன்னுடைய தொழிலில் பெரிய இழப்பு ஏற்பட்டதால் மிகவும் கவலையாக இருந்தார். ஒருநாள் பூங்கா ஒன்றிற்கு சென்று அங்கிருக்கும் பெஞ்சில் அமர்கிறார். அதே பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் இந்த வியாபாரி சோகமாக இருப்பதை பார்த்துவிட்டு, உங்களுக்கு என்ன பிரச்னை?. ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார்.

அப்படி அவர் கேட்டதுமே இந்த வியபாரியும் தன்னுடைய பிரச்சனை எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி முடிக்கிறார்.

அதற்கு அந்த பெரியவரோ இவ்வளவுதானா? என்று கூறிவிட்டு அந்த வியாபாரிக்கு 50 லட்சத்திற்கு செக் எழுதிக் கொடுக்கிறார். இந்த பணத்தை வைத்து உங்கள் பிரச்சனைகளை சரிசெய்து கொள்ளுங்கள். இந்த பணத்தை நான் உங்களுக்கு சும்மா கொடுக்கவில்லை.  அடுத்த வருடம் இதே இடத்தில், இதே நேரத்தில் வந்து என்னுடைய பணத்தை திருப்பிக்கொடுங்கள் என்று கூறினார்.

இப்போது அந்த வியாபாரி மிகவும் மகிழ்ச்சியடைகிறார். அவர் அந்த பணத்தை எடுத்து செலவு செய்யாமல், தினமும் தான் பார்க்கும் இடத்தில் அந்த செக்கை வைத்துவிட்டு கடுமையாக உழைக்கிறார். தன்னுடைய வியாபாரத்தில் செய்த தவறுகளை கண்டுப்பிடித்து திருத்தி சரி செய்கிறார். அதன் பலனாக அடுத்த வருடமே வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைகிறார்.

இப்போது பணத்தை திருப்பிக் கொடுக்க அதே பூங்காவிற்கு செல்கிறார். அங்கே அந்த வயதானவரை காணவில்லை. அப்போது அங்கே இருந்த பெண்மணியிடம், போன வருடம் உங்களிடம் ஒரு வயதானவர் பேசிக்கொண்டிருந்தாரே அவர் வரவில்லையா? என்று கேட்டார். ஏன் அவர் உங்களிடம் ஏதேனும் பிரச்சனை செய்தாரா? என்று பெண்மணி கேட்கிறார். அதற்கு வியாபாரியோ, ‘அப்படியெல்லாம் இல்லை. அவர் எனக்கு 50 லட்சம் செக்கை கொடுத்தார். அதை திருப்பிக் கொடுக்கத்தான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னார்.

இதையும் படியுங்கள்:
பிரச்னையை எண்ணி புலம்பும் நபரா நீங்க? இந்தக் கதையை கொஞ்சம் படிச்சு பாருங்க!
நம்பிக்கை மட்டும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா?

அதற்கு அந்த பெண்மணியோ, அந்த வயதானவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். தினமும் பூங்காவிற்கு வந்து இங்கிருப்பவர்களுக்கு செக் எழுதிக் கொடுப்பதையே வேலையாக வைத்திருந்தார். ஆனால் இப்போது அவர் உயிரோடு இல்லை என்று சொல்லி முடிக்கிறார்.

இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையிலும் பிரச்சனை என்று வரும்போது, அங்கே நமக்கு முக்கியமாக தேவைப்படுவது நம்பிக்கையே! நமக்கு ஆறுதலுடன் சேர்த்து ஒருவர் கொடுக்கும் நம்பிக்கை நம்மை எந்த உயரத்தையும் அடைவதற்கு உறுதுணையாக இருக்கும். நான் சொல்வது சரிதானே? நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com