நல்ல நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும்? சாணக்கியர் சொல்லும் 5 முக்கிய குணங்கள்!

சாணக்கியரின் நீதி வழிகாட்டும் உண்மையான நட்பு: வாழ்க்கைப் போரில் துணை நிற்கும் ஐந்து சிறந்த நண்பர்களின் குணங்கள் என்ன?
Friendship - Chanakya Philosophy
Friendship - Chanakya philosophy Credit: AI Image
Updated on

சாணக்கியர் மிகச் சிறந்த தத்துவஞானி ஆவார். இவரது நூலில் அரசியல், தத்துவம், ஆலோசனை எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார்.

இந்த நட்பு யுகத்தில் நண்பர்களின் உதவியின்றி, வாழ்க்கைப் போரில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியாது. 'நட்பு' என்ற தாரக மந்திரம், இன்று மனித இனத்தின் உயிர் மூச்சாக(chanakya-philosophy-on-true-friendship) இருக்கிறது.

ஒரு நல்ல நட்பின் முக்கிய பண்புகள்

  • ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது: ஒரு நல்ல நண்பர் கடினமான நேரங்களில் உதவி செய்வார்; வெற்றிகளைக் கொண்டாடுவார். அத்தகைய நண்பர்கள் நீங்கள் சோகமாக இருக்கும்போது உங்களுக்கு ஆறுதல் அளிப்பார்கள்; உங்களின் பின்னடைவுகளுக்குப் பிறகு, மீண்டும் முயற்சி செய்ய உங்களை ஊக்குவிப்பார்கள்.

  • பரஸ்பர நம்பிக்கை: எந்தவொரு அர்த்தமுள்ள நட்பிற்கும் நம்பிக்கையே அடித்தளம். நீடித்த பிணைப்புகளை வளர்க்க, நண்பர்களிடையே பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் இருக்க வேண்டும்.

  • நண்பர்களின் நற்குணம்: நீங்கள் ஒழுக்கமுள்ள நண்பர்களுடன் பழகுவது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், முயற்சிக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும். நேர்மை, இரக்கம் போன்ற நற்குணங்களைக் கொண்டவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். இத்தகைய தோழர்கள் நம் வாழ்க்கையை வளமாக்குவது மட்டுமல்லாமல், நேர்மறை எண்ணம் கொண்ட முன்மாதிரிகளாகவும் செயல்படுவார்கள்.

மோசமான நட்புகள்

ஏமாற்றுதல், சுயநலம், ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்தல் மற்றும் ஊழல் புரிதல் போன்ற குணங்களைக் கொண்டவர்களுடன் கூட்டணி வைக்கக் கூடாது. மோசமான நட்புகள் நம்முடைய நல்வாழ்வைக் கெடுத்து, வீழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கும்.

நண்பர்களின் பாராட்டுக்களும் மதிப்புகளும்

நண்பர்களை அதிகம் பாராட்டி, ஆதரித்து, அவர்களுடன் இணக்கமான உறவைப் பேண நாம் அவர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்க வேண்டும். உங்கள் நண்பரை முழுமையாக நம்புவதுதான், உண்மையான நட்பின் மிகப் பெரிய பலம்.

இதையும் படியுங்கள்:
திருமணத்திற்கு பின் நண்பர்கள் தேவையா? ஒரு புதிய பார்வை!
Friendship - Chanakya Philosophy

மாறிவரும் காலத்திலும் உண்மையான நண்பன் எப்போதுமே நம்மோடு இருப்பான். அதனால்தான், உண்மையான நண்பரை அடையாளம் கண்டு அவருடன் நேரத்தைச் செலவிட வேண்டும். உங்கள் நண்பரை நீங்கள் எவ்வளவு அதிகமாக மதிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் நட்பு ஆழமாகும்!

logo
Kalki Online
kalkionline.com