சாணக்கியர் சந்திர குப்த மௌரியப் பேரரசின் தலை சிறந்த அமைச்சர், நிர்வாகி மற்றும் அறிஞர். ஆட்சியில் நிதித்துறை மட்டுமன்றி பல துறைகளை ஒருவராகவே நிர்வாகம் செய்துள்ளார். அவர் அறிவுரைகளை பின்பற்றிய மன்னர் சந்திரகுப்தர் பல துறைகளிலும் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார் என்பது வரலாறு. சாணக்கியர் நாலந்தா பல்கலைக்கழகத்தில் வகுப்பெடுத்த அறிஞர். அவர் அறியாத விஷயமே இல்லை எனலாம்.
சாணக்கியர் அறிவுரைகள் காலத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை. எக்காலத்திற்கும் பொருந்துபவை. சாணக்கியர் சொன்னவைகளை பின்பற்றினால் வாழ்வில் முன்னேற்றம் உறுதி.
உங்கள் ரகசியங்கள் பற்றி வெளியே சொல்ல வேண்டாம். "நீயே காப்பாற்ற முடியாத உன் ரகசியத்தை மற்றவர்கள் காப்பாற்ற மாட்டார்கள்" என்கிறார் சாணக்கியர். யாரிடமும் உங்கள் இலக்குகளைப்பற்றி சொல்லாதீர்கள். சிலர் அதை புகழ்ந்தாலோ அல்லது மாற்றவோ முயற்சித்தால் உங்கள் லட்சியம் வீணாகிவிடும். எனவே இலக்கு மற்றும் அதை அடையும் வழிமுறைகள் இரகசியமானவை.
உங்கள் உடல் நிலை குறித்து நெருக்கமானவர்கள் தவிர வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம். அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.
அலுவலகத்தில் ஒருவரைப்பற்றி மற்றவரிடம் சொல்வதைத் தவிர்க்கவும். அது பிரச்சினைகளைக்கு வழி வகுக்கும்.
பொது அறிவில் நிச்சயம் தேர்ச்சி இருக்கவேண்டும். அது முன்னேற்றத்திற்கு சிறந்த வழி.
"கோபத்தை தீர்மானமாக மாற்றுங்கள்" என்கிறார் சாணக்கியர். எனவே கோபத்தை வீணடிக்காமல் அதை ஏதேனும் சாதிப்பதற்கான ஒரு சபதமாக எடுக்கலாம்.
"அவநம்பிக்கையாகப் பேசுபவர்கள் மற்றும் தனது நிலை பற்றி எப்போதும் கவலை கொண்டு புலம்புபவர்களிடமிருந்து விலகி இருங்கள்."
ஒருவரது பலவீனத்தைப்பற்றியே பேசுபவரிடமிருந்தும் விலகியிருக்க வேண்டும்.
முட்டாள்கள், சோம்பேறிகளிடம் சகவாசம் வைக்க வேண்டாம்.
சாணக்கியர் கூறிய அனைத்தையும் பின்பற்ற இயலாவிடினும் முடிந்தவரை இந்த 8 விஷயங்களை பின்பற்றினாலே வெற்றிக்கான பாதையில் நிச்சயம் அடியெடுத்து வைக்கலாம்.