இந்த 5 பேருக்கு மரியாதை தரக்கூடாது என்கிறார் சாணக்கியர் - யார் அவர்கள்?

அனைவராலும் மதிக்கப்பட வேண்டுமானால், சாணக்கிய நீதியின்படி, சிலருக்கு மரியாதை தரக்கூடாது என்றும், அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.
Chanakya
Chanakya
Published on

ஒருவருக்கு தவறான பழக்கங்கள் இருந்தால் அவர் பல பிரச்னைகள், கஷ்டங்களையும் எதிர் கொள்வார்கள். அவர்கள் எதிர்காலத்தில் நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். அனைவராலும் மதிக்கப்பட வேண்டுமானால், சாணக்கிய நீதியின்படி சிலருக்கு மரியாதை தரக்கூடாது; அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். யார் அவர்கள்?

1. முகஸ்துதி செய்பவர்கள் :

எவ்வித உழைப்புமின்றி மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி பணம் சம்பாதிக்க விரும்பும் சிலர் உள்ளனர். உண்மையில் அவர்கள் மற்றவர்களை புகழ்வதற்கு பின்னால் உள்ள காரணம் அவர்களின் சுயநலம். அவர்களின் தவறு வெளிப்பட்டு விடும் என்று அவர்கள் அஞ்சுவதே ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்களுக்கு மரியாதை கொடுத்தால் அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்.

2. அனைவரிடமும் நண்பராக இருப்பவர்கள் :

எல்லோருக்கும் நண்பனாக இருப்பவர் உண்மையில் யாருக்கும் நண்பனாக இருக்க மாட்டார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த மக்கள் உங்கள் முன்னால் மற்றவர்களை பற்றி மோசமாக பேசுவார்கள். நீங்கள் இல்லாத போது உங்களைப் பற்றியும் மோசமாகவும் பேசுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை ஒருபோதும் நம்ப முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு மரியாதை கொடுத்தால் அவர்கள் தொடர்ந்து அதேயே செய்வார்கள். இவர்களை நம்ப கூடாது.

3. கூட்டாக சதி செய்பவர்கள் :

தனியாக நிற்க தைரியம் இல்லாதவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். அவர்கள் ஒரு குழுவாக செயல்படுவார்கள். அவர்கள், அவர்களைப் போலவே, குணமுடையவர்களுடன் குழுவை உருவாக்கி மற்றவர்களுக்கு எதிராக சதி செய்வார்கள். சிறிய பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பிரச்சினையை அதிகரிக்கத் தொடங்கி மற்றவர்களின் வாழ்க்கையை கடினமாக்குவார்கள். அப்படிப்பட்டவர்கள் மரியாதை கொடுக்க தகுதியற்றவர்கள்.

4. பாவ செயல்களை செய்பவர்கள் :

விலங்குகள், பறவைகள், குழந்தைகள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு போதும் மன்னிப்புக்கு தகுதியானவை அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகையவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடாது. உண்மையில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஏனென்றால் அத்தகையவர்களை மதிப்பது சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

5. மற்றவர்களை அவமானப்படுத்துபவர்கள் :

மற்றவர்களை அவமானப்படுத்துவதில் மகிழ்ச்சி காணும் சில மோசமான ஜென்மங்கள் இருக்கிறார்கள். இதைச் செய்வதன் மூலம் அவர்கள் அனைவரின் பார்வையிலும் பெரியவர்களாக மாறுவதாக அவர்கள் உணரலாம். ஆனால் உண்மை என்னவென்றால் அத்தகையவர்கள் பெரிய விரக்தியை அனுபவிக்கிறார்கள். மேலும் மற்றவர்களை சிறியவர்களாக தோன்ற வைக்க தங்களை முக்கியமானவர்களாக உணர மற்றவர்களை அவமானப்படுத்துகிறார்கள். குறிப்பாக அவர்கைளை தாழ்வாகக் கருதுபவர்கள் மரியாதைக்கு தகுதியற்றவர்கள் என்று கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? சாணக்கியர் கூறும் அறிவுரை இதுதான்!
Chanakya

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com