மனோபாவத்தை மாற்றுங்கள் வெற்றி உங்களுக்கே!

motivation articles
motivation articlesImage credit - pixabay
Published on

ரு மடாதிபதி இருந்தார். பதவிக்கு வருமுன் அவரை உலகம் அறிந்திருந்தது. பதவிக்குப் பிறகு அவர் இருக்கிறார். எனினும் உலகம் அவரை அறியவில்லை. பதவிக்குப் வருமுன் உலக விஷயம் தெரிந்தவராக இருந்தார். பதவிக்குப் வந்த பின் பூஜை செய்வதிலும் கணக்கு வழக்கு பார்ப்பதிலும்  காலத்தை செலவிட்டார்.

பதவி  எதற்காகப் பெற்றோம் என்பதையே பலர் மறந்து விடுகிறார்கள். சுமையாக பிரச்னையாக பதவியைப் பார்த்தால் அது தோல்வியாகத்தான் முடியும். நாம் பார்க்கும் விதம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது‌ அல்லது நம்மை செயலிழக்கச் செய்கிறது. எப்பொழுது நீங்கள் பதவியை ஓரு வாய்ப்பாகப் கருதுகிறீர்களோ அன்றே லட்சியம் குடிகொள்ள சாதிக்க முடியாததை சாதிக்கிறீர்கள். என்று நீங்கள் பிரதமராக அல்லது முதல்வராக இருந்துகொண்டு என்னைக் குழிபறிக்க எண்ணுகிறார்கள் என்று கவலைப்படுகிறீர்களோ அன்றே உங்கள் குறிக்கோள் நாட்டுப் பணி பின்னுக்குத் தள்ளப் படுகிறது. பதவியில் எப்படியாவது இருக்க வேண்டும்  என்ற எண்ணம்தான் பேசுகிறது.

ஒரு தொழிற்சாலை மேலாளரை யாருக்கும் பிடிக்கவில்லை. அவர் சர்வாதிகாரிபோல் நடந்துகொண்டார். பிறகு ஒருவர் அவரிடம் "உங்கள் தொழிலாளர்களுடன் பேச கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்யலாம் என்று நான நினக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என் அபிப்ராயத்தை என கேட்கும்போது தன்னையும் மதித்து யோசனை கேட்கிறார் என்ற எண்ணம் அவர்களை உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் விச்வாசத்துடன் நடக்க வைக்கும் " என்று அறிவுரை கூறினார்.

மேலாளர் தன்னை மாற்றிக் கொண்டு பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது பரிசும் பாராட்டும் நடந்தன. அவர் பிரிகிறாரே என்று பலரும் கண்கலங்கினார்கள்.   நம் மனோபாவத்தை மாற்றும்போது எல்லாமே நல்லதாக நடக்கும். என்னால் முடியாது என்பதைவிட என்ன செய்ய முடியும் என பார்க்கிறேன் என்று கூறும்போது நம் மனோபாவம் மாறுகிறது. இந்த உலகில்  எல்லாமே முன்னதாகவே விதிப்படி எழுதப்பட்டுவிட்டது நான் என்ன செய்ய முடியுமா என்று எண்ணாமல் "நான் சுதந்திரமான மனிதன். என் விதியை என்னால் நிர்ணயிக்க முடியும்" என்று சொல்லிக் கொள்ளலாம். பிறர் நம்மை ஆட்டி வைக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலை என்னை ஆட்டிப்படைக்கிறது என்று முறையிடாமல் இதை எல்லாம் மீறும் துணிவு என்னிடம் இருக்கிறது என்று கூறிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சேமிப்பு நம் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் தெரியுமா?
motivation articles

அடுத்து வங்கிக்காரன் கடன் கொடுத்தால் என்று சொல்வீர்கள். அப்படிக் கடன் கொடுத்தாலும் நெருக்கடியான நேரத்தில் கேட்பார்கள். மாறாக என் வீடு நிலம்  நகை நட்டு இதிலிருந்து எவ்வளவு பணம் சேகரிக்கும் இயலும் என்று எண்ணலாம். ஒரேயடியாய் பெரிய தொழிலைத் தொடங்குமுன்  சிறிய தொழிலைத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக விரிவு செய்து  பணம்  சேர்க்கலாம். எனக்கு என்ன தொழில் தெரியும்  ஒன்றும் தெரியாது என்று அங்கலாய்ப்பு படுவதற்கு பதில் காளான் வளர்க்கலாம். நல்ல ஆதாயம் வரும் என சொல்கிறார்கள்.

அதை கவனிப்பேன்  என்று  இறங்கலாம். முடியம் என்ற மனோபாவம் கொண்டவர்களால்தான் இன்றைய உலகம் உருவாகி இருக்கிறது. இதுவரை உங்களால் முடியாது என்பதற்குக் காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தீர்களானால் உடனே உங்கள் மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். என்னால் முடியும் என்றே எண்ணுங்கள் வெற்றி உங்களுக்கே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com