Motivation Image
Motivation Imagepixabay.com

அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் வெற்றி உங்களுக்குத்தான்!

ரு மனிதன் சாதாரணமாக வாழ்க்கை நடத்துவதற்கும், தன் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. வெற்றிகரமான வாழ்க்கைக்கு மெனக்கெடல்களும் உழைப்பும் வித்தியாசமான அணுகுமுறையும் அவசியம். 

இந்த 12 விதமான உத்திகள் ஒருவரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும். அவை என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் காண்போம். 

1. வித்தியாசமான அணுகுமுறை;

வெற்றியாளராக விரும்புவதற்கு முக்கிய தேவையாக விளங்குவது. அணுகுமுறையில் மாற்றம். வித்தியாசமான அணுகுமுறை நல்ல பயன் தரும். நீங்கள் எப்படி உங்களையும் இந்த உலகையும் பார்க்கிறீர்கள்,   கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அனுபவங்கள் போன்றவற்றை வித்தியாசமாக அணுகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.

2. நம்பிக்கையே மிகச்சிறந்த ஆற்றல்:

நேர்மறையான அணுகுமுறை கொண்ட நம்பிக்கை உங்களுக்கு மிகச்சிறந்த ஆற்றலைத் தரும். மிகச் சிறப்பாக  செயல்பட செய்து லட்சியங்களை அடைய வைக்கும். 

3. நேர்மறையான மனோபாவம்;

எல்லா விஷயங்களிலும் நேர்மறையான அணுகுமுறை சிக்கல்கள் சிரமங்களில் இருந்து மீண்டு எழுந்து வரும் ஆற்றலைத் தரும். 

4. எதிர்மறை எண்ணங்களை களைதல்;

எதிர்மறையான  எண்ணங்கள் எழும்போது அவற்றை கண்டறிந்து களைந்துவிட்டு நேர்மறையான சொற்றொடர்களையும் எண்ணங்களையும் தனக்குள் புகுத்தி தன்னைத்தானே பலமானவராக ஆக்கிக்கொள்ள வேண்டும். 

5. வளர்ச்சி மனப்பான்மை

தன் மீது அதீத நம்பிக்கை வைத்து  செயல்படுவதோடு மட்டுமல்லாமல் எதிர்கொள்ளும் சவால்களையும் சிரமங்களையும், தன் முன்னேற்றத்திற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக எண்ணி  செயல் பட வேண்டும். 

இதையும் படியுங்கள்:
கைலாசகோனா அருவிக்குப் போயிருக்கீங்களா?
Motivation Image

6. நன்றியுணர்வு;

வாழ்க்கையில் கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றி பாராட்டி மகிழவேண்டும். அது இன்னும் அதிக அளவு நேர்மறை விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

7. சுய விழிப்புணர்வு; ஒருவர் தன்னுடைய உணர்வுகள்தன்னுடைய நடத்தையில் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

8. அனுதாபம் மற்றும்  உணர்வு சார் நுண்ணறிவு;

அனுதாபம் மற்றும் உணர்வு சார் நுண்ணறிவுடன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் கலந்து பழக வேண்டும். இது நல்ல  உறவுகளையும் நட்பையும் ஏற்படுத்தித் தரும். 

9. மன அழுத்தம் மற்றும் எதிர்மறையை  சமாளித்தல்;

செய்யும் வேலையில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறையான உணர்வுகள் எழும்போது அவற்றை நேர்மறையான அணுகுமுறையால் மாற்ற வேண்டும். 

10. தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை மனப்பாடமாக காணுதல்

வாழ்க்கையில் என்ன வேண்டும்? என்னவாக விருப்பம்? என்பது போன்ற தெளிவான இலக்குகள் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அவற்றை அடைந்து விட்டது போல மனக்கண்ணில் படமாக பார்க்க வேண்டும். 

11. தோல்வியிலிருந்து பாடம் கற்றல்;

முயற்சிகளில் தோல்வி அடையும்போது மனம் தளராமல் அவற்றை அனுபவங்களாக ஏற்றுக் கொண்டு தன் கனவை நோக்கி நகர வேண்டும். 

12 சின்ன வெற்றிகளை கொண்டாடுதல்;

தன் முயற்சியில் சிறிய வெற்றி அடைந்தாலும் அவற்றை கொண்டாடும் மனநிலை இருந்தால், மனது உத்வேகமாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com