மாறுபடும் சமுதாயம்: எங்கே செல்கிறது இளைய தலைமுறை?
இறைவன் படைப்பில் அனைவரையும் குறையில்லாமல்தான் படைக்கிறான். அதில் ஒரிரு நபர்கள் அங்கஹீனத்தோடு பிறக்கிறாா்கள். அது அவரவர் முன்ஜென்ம பாவங்களுக்கு ஏற்ற செயல் என சிலர் கருதுவாா்கள். அதைவிட மேலாய் குழந்தை வேண்டாம் என கருகலைப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் வரும் பாதிப்பாகவும் கருதலாம்.
அதாவது சகுனம் பாா்ப்பதுபோல. சிலருக்கு நம்பிக்கை. சிலருக்கு மூடநம்பிக்கை என்பது போலவும் கருதலாம். அதேபோலத்தான் நல்ல எண்ணமும் தீய எண்ணமும். (Changing society ) பொதுவாக உலகில் நல்லது இருந்தால் தீயதும் வலம் வருவது, இன்று நேற்றல்ல. புராணங்களிலும் இது போன்ற நல்செயல், கெட்ட செயலும் இருந்திருக்கிறது.
உதாரணத்திற்கு திருதிராஷ்டிரர்கள் -சகுனி வரலாறே சான்றாகும். ஆக நல்ல எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் தீய எண்ணம் மிகுந்தவர்கள் வளா்ந்து வருவது அபாயம்தான்.
ஒரு குடும்பத்தில் பிறக்கும் சிலரில் ஒரு சிலர் தர்ம சிந்தனை, நோ்மை, நீதி, சத்தியம் தவறாமை, போன்ற குணங்கள் கொண்டவர்களாக இருக்கிறாா்கள்.
மேலும் சிலர் சூது, வாது, வஞ்சகம், பொய், அடுத்துக் கெடுப்பது, பெறாமை போன்ற தீய எண்ணங்களோடு வலம் வருகிறாா்கள்.
ஒரு குடும்பத்திற்குள்ளேயே இப்படி இரட்டை வேடம், இரட்டை குணம் கொண்டவர்களும் இருப்பதும் நாம் கண்கூடாகப் பாா்த்து வருகிறோம்.
சொத்துக்காக அண்ணன், தம்பிகள் சண்டை வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை, இப்படி பல குடும்பங்களில் நல்ல எண்ணங்கள் இல்லாமல் தீயகுணங்கள் பரவிவிட்டது. இங்கே மனித மனங்களில் விசாலம் இல்லை.
குறுகிய மனப்பான்மையே வளர்ந்து வருகிறது. இது இந்த அளவிற்கு வளா்ந்துவருவது மிகவும் ஆபத்தானது.
வளரும் சந்ததிகள் வாழ்வியல் முறையில் கலாச்சாரத்தில், பண்பாடுகளில், முறை தவறிய உறவுகளால், பலவித பாதிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கும் என்பது மனதிற்கு ஆறுதல் தரவில்லையே!
பலர் தேன் போல இனிக்கப் பேசுகிறாா்கள் என்று நினைத்தால், வெளியே போய் விஷத்தையல்லவா கக்குகிறாா்கள்.
இந்த நிலை மாறவேண்டும், தற்கால இளய சமுதாயம் தீய குணங்களின் மாயையில் விழுந்து வருவதும், அதனால் எதிா்காலம் பாழாகி வருவதும், ஆரோக்கியமாகத் தொியவில்லை.
ஆனால் தெய்வத்தின் கணக்கிலிருந்து யாரும் அவ்வளவு எளிதாக தப்பிக்க இயலாது என்பதை தீய மதி கொண்டவர்கள் உணரவேண்டும். அந்தக்காலம்போல இந்தக்காலம் வருமா என சீனியர் சிட்டிசன்களின் ஏக்கப்பெருமூச்சு பல இடங்களில் நிறைந்திருப்தும் நிதர்சனமே!