
பள்ளியில் படிக்கும் காலத்தில் சந்தோஷம் என்றால் விடுமுறை நாட்கள்தான். அதுவும் annual பரீட்சை முடியும் நாள் அன்று ஆஹா இரண்டு மாதம் ஸ்கூல் பக்கம் வர வேண்டாம் என்று நினைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பள்ளிக்கு செல்லும் நாட்களில் லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது பாட்டி தரும் ஜவ்வு மிட்டாய் தரும் சந்தோஷம் அடடா… கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாயில் கரையும் நெய் சொட்டும் மைசூர் பாக் தோற்று விடும் ஜவ்வு மிட்டாய் சுவையில்.
முதல் ரேங்க் வாங்கும்போது " very good keep it up" என்று டீச்சர் சொல்லும்போது கிடைக்கும் அளவிலா ஆனந்தம். டீச்சர் லீவ் எடுத்திருந்தால் அந்த கிளாஸை அட்ஜஸ்ட் பண்ணி மற்ற கிளாஸை நடத்தி "go home" என்று எப்போது கையில் ரிஜிஸ்டர் எடுத்து ஸ்கூல் ப்யூன் வருவார் என்று எதிர்பார்த்து டீச்சர் லீவ் எடுத்திருந்தால் கிடைப்பதில் ஒரு சந்தோஷம்.
சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டு தெரிந்தவர் சைக்கிளை வாங்கி கீழே விழுந்து முழங்கால் சிராய்த்து ஒரு வழியாக சைக்கிள் ஓட்ட கற்று கொண்டதில் சின்ன சந்தோஷம். அப்புறம் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டியது. பிறகு சைக்கிள் பேலன்ஸ் இருந்தால் TVS 50ஓட்ட முடியும் என்பதை தெரிந்து அப்பாவின் வண்டியை முதல் முறை ஓட்டும்போது அப்பப்பா. ப்ளேனை ஓட்டிய மாதிரி சந்தோஷம்தான்.
என் படைப்புகள் பத்திரிகைகளில் வந்திருந்தால் அதைப் படித்து அடைந்த சந்தோஷம். அதைவிட அதை நண்பர்களிடம் பகிந்துகொள்வதில் கிடைக்கும் சந்தோஷம் அளவிடமுடியாதது.
இப்படி நிறைய நிறைய சின்ன சின்ன சந்தோஷங்கள் அனுபவித்த நாம் நம் பிள்ளைகளுக்கு தரவில்லையோ என்பது மட்டும் தான் வருத்தம். மற்றபடி சிறகடித்து பறக்கும் பறவையைப்போல் அடைந்த சந்தோஷங்கள் நிறைய. அந்த சந்தோஷங்கள்தான் ஊக்குவிப்பு.