
நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் நகைச்சுவை உணர்வுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் மனித வாழ்க்கை லட்சியம் நிரம்பியது. லட்சியம் அல்லது குறிக்கோள் என்பது வெற்றியை நோக்கமாகக் கொண்டது. இலக்கு வெற்றி என்றாலே இறுக்கம் நிறைந்தது. ஏனெனில் இரண்டும் எதிர்காலத்தில் அது நிகழலாம். அல்லது நிகழாமலும் போதலாம். ஒரு நிச்சயமற்ற தன்மையில் மனம் எப்பொழுதும் ஒருவித பரபரப்பில்தான் இருக்கும்.
இதனால்தான் ஓஷோ என்ற மகா ஞானி, "மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிகளும் ஞானமடைந்திருக்கின்றன என்றார். (Except man everything is enlightened)
நகைச்சுவை உங்களுடையஆற்றலை சேமிக்க உதவி செய்கிறது. உயிராற்றல் என்றால் உங்கள் சக்திதான்.
நீங்கள் மனம் விட்டு சிரிக்கும்பொழுது உங்களுடைய சக்தி ஓட்டமும் (nervous conduction) சத்து ஓட்டமும்(blood circulation)மிகவும் சீராக இயங்குகின்றன என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது . இப்படி சீராக இருக்கும்பொழுது உங்களுடைய உயிர் ஆற்றலும் சீராகவே இருக்கும்.
அதில் எந்தத் தடையும் இருக்காது. எங்கு தடை ஏற்படுகிறதோ அங்கு தேக்கம் நிலவும். தேங்குகின்ற இடத்தில் சக்தி வீணாகும். நீங்கள் இறுக்கமாக இருந்தால் உங்களுடைய சக்தி ஆங்காங்கே தேக்கம் அடையும். இது நீடித்து இருந்தால் பல உள்உறுப்புக்கள் பாதிப்பு அடையும். இதனால் உடம்புக்கு தீராத வியாதிகள்தான் வரும்.
தியானம் சக்தியை எப்படி சேமிக்கிறதோ, அதைப்போல நகைச்சுவையும் சக்தியை சேமிக்கும். வாழ்க்கையில் நீங்கள் உங்கள் இலக்கை விரைவில் அடைய உங்களுக்கு சக்தி சேமிப்பு மிகவும் அவசியம். இதைப் புரிந்துகொண்டு குறைந்தது ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது ஒருமணி நேரம் மனதார சிரியுங்கள். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
இதற்கு வாழ்க்கையை சற்று விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் காலம் முழுவதும் இறுக்கம் என்று இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் சிறந்த வெற்றியாளனாக இருக்கக்கூடும்.
உங்கள் லட்சியத்தை நீங்கள் நிறைவாக அடைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் ஒரு கவலை கூட சாப்பிட முடியாத நிலையில் பார்ப்பவர்கள் பச்சாதபப்படும் அளவில் உடல் வேதனையில் புழுங்கி வாழ்வீர்கள். ஆகவே நகைச்சுவையோடு வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள்.