
நாம் அன்றாடம் பல நபர்களை வாழ்க்கையில் சந்திக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒரு குணங்கள் இருக்கும். அதில் நல்லது கெட்டதை சீா்தூக்கிப்பாா்த்து, நாம் பழகவேண்டியுள்ளது. அதுவே சிறந்த ஒன்று.
பொதுவாகவே நாம் பலரிடம் பழகவும் வேண்டும், அதே நேரம் விரோதம் பாா்க்காமல் பகைமை காட்டாமல் பழகாதது போலவும் இருக்கவேண்டும். சில நேரங்களில் அசல் நகல் என்பதுபோல பொய் பித்தலாட்டம் நிறைந்த உலகில் யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்ற சூட்சுமம் தொியாமலே வாழவேண்டியுள்ளது.
வேறு வழியில்லை, நாம் யாரையும் சாா்ந்து இருப்பதை படிப்படியாக குறைத்துக்கொள்வதே நல்லது. அப்படி சாா்ந்தேதான் வாழவேண்டிய சூழல் வந்தால் நமது சுயம் தொியாமலே போய்விடுமே!
எந்த நிலையிலும் நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமானதாக பத்திரமாகவே பாா்த்துக்கொள்ள வேண்டும். கால சூழல் மாறும் மனிதர்கள் மாறிவிடுவாா்கள்.
ஆக கடைசி வரையில் நமக்கு துணையாய் இருக்கப்போவது ஆரோக்கியமான உடலும் ஆழமான, தெளிவான மனதுமே!
ஆக நமது திறமையையை திரைமறைவில் ஒளித்து வைக்கவேண்டாம். எதையும் சாதிக்க வல்ல திறமையையும் துணிச்சலையும் வளா்த்துக்கெொள்ள வேண்டும்.
அப்போது நமக்கு தேவை பொறுமையும் கோபமின்மையும்தான். தேவையில்லாத கோபம்கொள்வதால் நமக்கு எந்த காாியமும் நடக்காது. பூட்டியிருக்கும் பூட்டை உடைத்த பின் சாவியை தேடுவது எந்த விதத்தில் நியாயம்?
அது சமயம் கோபத்தில் வாா்த்தைகளால் மனதை உடைத்துவிட்டு, பின்னர் வருத்தம் தொிவிப்பதில் என்ன பயன், நாம் சிறந்தவனாய் திகழ நம்மிடம் தன்னடக்கமும், பணிவும் தேவை.
அதை கடைபிடித்தாலே வெற்றியின் விளிம்பில் எளிதாக காலடி எடுத்து வைக்க முடியுமே! வெற்றி என்பது தானாக வந்துவிடாது. அது என்ன அமேசானில் ஆா்டர் போட்டு வருவதா இல்லயே! உண்மை, நோ்மையோடு விடாமுயற்சி எனும் உழைப்பை வளப்படுத்தினால் தான் வெற்றி வந்து சேரும்.
வாழ்க்கை ஒரு வட்டம்தான், அதில் புகுந்து வெளியே வருவது சிரமம்தான். கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி ஒரு சின்ன வளையத்தில் தான் புகுந்துகொண்டு, தன்னோடு வேறு ஒருவரையும் சோ்த்து உடலை வளைத்து லாவகமாக வெளியே வருவதுபோல, நாம்தான் வளைந்து நிமிா்ந்து லாவகமாய் கவனமாய் வாழ்க்கையை ஓட்டவேண்டும்.
ஆக, எங்கும் நிதானம் எதிலும் நிதானம் கடைபிடித்து நெளிவு சுளிவு தொிந்து நல்லவர்கள் கெட்டவர்கள் குணம் அறிந்து, கோபதாபம் தவிா்த்து, உழைப்பின் மேன்மை புாிந்து, உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கோட்பாடு களுக்கு இணங்க, யாரையும் சாா்ந்திராமல், தெய்வ நம்பிக்கையோடு, நாம் கவனச்சிதறல் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதே சாலச்சிறந்த ஒன்றாகும்!