ஒரு செயலை எப்படி தொடங்குவது என்று குழப்பமா? இந்த 7 குறிப்புகள் உங்களுக்கு உதவக்கூடும்!

motivation image
motivation imageImage credit - pixabay

புதிதாக ஒரு தொழில் தொடங்குவது அல்லது ஏதாவது ஒரு செயலை செய்வது என்று முடிவெடுத்து விட்டால் உடனே செயலில் இறங்குவதற்கு தயக்கமும் பயமும் பலருக்கும் இருக்கும். இது சரியாக வருமா? வெற்றி கிடைக்குமா என்ற மனப்போராட்டத்திலேயே அந்த செயலை ஆரம்பிக்காமலேயே தள்ளிப் போடுவார்கள். இந்த 7 குறிப்புகள் அவர்களுக்கு உதவக் கூடும்.

1. தொடங்குங்கள் இப்போதே;

ஒரு செயலை செய்ய முடிவு எடுத்த பிறகு அதை செய்து விட வேண்டும். அதற்காக மிகச்சரியான பொழுதிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களிடம் உள்ளதை வைத்து தொடங்கலாம். அது சிறியதாகவும் அல்லது பரிபூரணத்துவம் இல்லாமலும் கூட இருக்கலாம். வாழ்க்கையின் மிக அழகான ஆரம்பங்கள் குழப்பமான தொடக்கத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்பதை நினைவு      படுத்திக் கொள்ளுங்கள்.

2. பிறருடன் ஒப்பீடு வேண்டாம்

புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ஏற்கனவே அதில்  பிரபலமாகி இருக்கும் பெரிய தொழிலதிபருடனோ அல்லது ஓரளவு வளர்ச்சி அடைந்த மீடியம் லெவலில் இருக்கும் தொழிலதிபருடனோ உங்களை ஒப்பீடு செய்து கொள்ள வேண்டாம். நீங்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்கள். அதனால் ஒப்பீடு தேவையில்லை. அதேபோல நீங்கள் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்னெல்லாம் சாதிக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் குரல்களையும் புறக்கணிக்க வேண்டும். உங்களுடைய பயணம் தனித்துவமானது. உங்களுடைய தொடக்கப் புள்ளி மதிப்பு வாய்ந்தது. நீங்கள் செல்லும் பாதையில், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வைக்க வேண்டும்.

3. பயத்தை விலக்குங்கள்

புதிதாக ஒரு செயலை செய்யும் போது மனதில் பயம் எழுவது இயல்பான ஒன்றுதான். அதனால் தன்னைத் தானே முடக்கிக் கொள்ளக்கூடாது. பயத்தை எரிபொருளாக பயன்படுத்த வேண்டும். சிறிய தைரியமான படிகளை முன்னோக்கி எடுத்து வைத்து நம்பிக்கையுடன் செயல்படும் போது பயம் காணாமல் போய்விடும்.

4. ஆர்வத்தை செழுமைப்படுத்துதல்;.

 இந்த செயலை செய்ய ஆர்வத்தை தூண்டுவது எது? என்ன சாதிக்க ஆசைப்படுகிறீர்கள்? உங்களுடைய நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கான பதில்களை கண்டுபிடிக்கும் போது நீங்கள் செல்லும் திசை தெளிவாகிறது. அதைப்போல செய்யும் செயலில் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும் போதும் சவால்களை எதிர்கொள்ளும் போதும் இந்த கேள்விகளையும் பதில்களையும் உங்களுக்குள் ஞாபகப்படுத்திப் பாருங்கள். உங்கள் உறுதி மீண்டும் உங்களை எழுப்பி முன்னேற வைக்கும்.

5.  சிறிய வெற்றிகளை கொண்டாடுங்கள்;

நீங்கள் செய்யும் செயலில் சின்ன சின்ன வெற்றிகளைக் கூட மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மைல் கல்லையும்  மெதுவாகக் கடந்தாலும் உங்கள் பயணம் இனிமையானது என்பதை ஒப்புக்கொண்டு அதைக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு வெற்றியும் அது முக்கியமற்றதாக தோன்றினாலும் அது உங்களுடைய அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இது பின்னாளில் நீங்கள் செய்யக்கூடிய பெரிய சாதனைகளுக்கு ஒரு வேகத்தை உருவாக்கித் தரும்.

இதையும் படியுங்கள்:
30 பிளஸ் பெண்களுக்கான 6 விதமான சிகை அலங்காரங்கள்!
motivation image

6. தவறுகள் தவிர்க்க முடியாதவை;

உங்களுடைய செயல்பாடுகளில் அவ்வப்போது தவறுகள் நேரலாம். அவற்றுக்காக வருந்தவோ அல்லது உங்களை தாழ்வாகவோ நினைக்க கூடாது. தவறுகள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. அவை மதிப்புமிக்க பாடங்களை கற்றுத்தருகின்றன. அதனால் அணுகுமுறைகளை சரி செய்து தொடர்ந்து செயல்படுங்கள். மிக அழகான பயணங்கள் பெரும்பாலும் மாற்றுப்பாதைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிகழ்கின்றன என்பதை நினைவு கொள்ளுங்கள்.

7. கற்றுக்கொள்ளுங்கள்

உலகம் ஒரு மிகப்பெரிய வகுப்பறை. அதில் தினம் தினம் கற்றுக்கொள்ள எப்போதும் ஆர்வமாக இருங்கள். கேள்விகளை கேளுங்கள். பல்வேறு கோணங்களில் இருந்து அறிவைத் திரட்டுங்கள். எவ்வளவு வேகமாக கற்றுக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு புதிதாக ஒன்றை தொடங்கும் போது ஏற்படும் சவால்கள் மற்றும் சங்கடங்களை சமாளிக்கலாம். அதேநேரம் வாய்ப்புகளும் தேடி வரும். அதிக திறனுடன் அவற்றை பயன்படுத்திக் கொண்டு இலக்கை அடைந்து முன்னேறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com