.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
1987 ஆம் வருடம் அன்றைய கல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் டெஸ்ட் மேட்ச் முடிந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் ஆட்டம்.
முதலில் விளையாடிய இந்திய அணி ஸ்கோர் 40 ஓவர்களில் 238 / 6.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் எடுத்தார் துவக்க வீரர் ஸ்ரீகாந்த்.
இங்கு டெஸ்டிலும், ஒரு நாள் பந்தயத்தில் சுனில் கவாஸ்கர் பங்கு கொள்ளாதது பரபரப்பு செய்தியாக வலம் வந்தது.
பாகிஸ்தான் அணியினர் இலக்கை எட்ட ஆடி வந்தனர். இந்திய அணியின் கை ஓங்கி இருக்கும்பொழுது பாகிஸ்தான் வீரர் அட்டகாசமாக ஆட ஆரம்பித்தார்.
மேட்சில் விருவிருப்பு கூடியது.
ஒரு வங்கி கிளையில் வேலை பார்த்து வந்த சொற்ப
ஊழியர்களை மேட்சின் அதிரடி ஆட்டம் காந்தம்போல் கவர்ந்து இழுக்க, காண்டீன் அறையில் கூடிவிட்டனர்.
சுட சுட ஆவி பறக்கும் டீ அருந்தியபடி ஆட்டத்தில் சொக்கிலயித்து விட்டனர், அங்கு இருந்த சிறிய டி வி திரையில் கவனித்தபடி. உடன் விவாதம் வேறு. அந்த ஊழியர்களில் கேஷியரும் அடக்கம்.
இந்திய அணியின் ஆட்டம் அங்கு டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்க சுற்று புறத்தை மறந்து விட்டனர்.
மேட்ச் முடிந்தது. பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற உதவிய சலீம் மாலிக் 72 ரன்கள் (36 பந்துக்களில். 11x 4 & 1 x 6 ) ஆட்ட நாயகராக அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணி தோல்வியை எதிர் பார்க்காத ஊழியர்கள் pending work ஐ முடிக்க திரும்பி வந்தனர்.
அவ்வாறு வந்த ஊழியர்களை வரவேற்றது தலைகளில் இடி இறங்க வைத்த shock.
இவர்கள் ஆட்டத்தை மெய்மறந்து உள்ளே பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், வங்கி கிளையுள் சப்தம் போடாமல் நுழைந்த கொள்ளைக்காரர்கள், கேஷியர் கூண்டில் இருந்த பணத்துடன் நழுவி விட்டனர்.
கொள்ளை அடித்தவர்கள் கட்டாயம் நோட்டம் இட்டு, தோதான திட்டம் தீட்டி செயல்படுத்தி இருப்பார்கள்.
இந்த நிகழ்வு கற்று தந்த பாடம்.
ஆர்வம் மித மிஞ்சினால், பெரு நஷ்டத்திற்கு வழி வகுக்கும்.
சூழ்நிலை மிகவும் முக்கியம். செய்யும் தொழிலில் கவனமும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க மறக்க கூடாது.
ஈர்ப்பும் (attraction) கவனச்சிதறல் (distraction) தொந்தரவு அளித்தாலும், ஒரு முகப்படுத்துதல் (concentration) இம்மியும் குறையக் கூடாது.
பாதுகாப்பிற்கு (security and safety) அதிகமாக முக்கியத்துவம் அளிப்பது மிக மிக அவசியம்.
ரிஸ்க் எடுக்க வேண்டியதுதான். ஆனால் தேவையற்ற ரிஸ்க் எடுத்து தவிப்பது தேவைதானா?