ஆர்வமே சிறந்த ஆரம்பமாக இருக்கும்!

Curiosity is the best start!
Lifestyle stories
Published on

நாம் அவரைவிட முந்திச் செல்ல வேண்டும் என ஆசைப்படுவோம் அது தவறல்ல. ஆனால், அந்த முந்திச் செல்ல வேண்டும் என்ற வழி மிக சரியாகவும் மிகத் துல்லியமாகவும், அதேபோல் அந்த வழியில் நாம் மிகக் கடுமையான நேர்த்தியான உழைப்போடு சென்றால் மட்டுமே நாம் யாரையும் முந்தி செல்லலாம். 

ஒரு விளையாட்டு வீரர் அவர் பின்தங்கி இருக்கிறார். அவர் முதலிடத்திற்கு வரவேண்டும் அப்படி என்றால் அவர் என்ன செய்ய வேண்டும். முதலில் நன்கு பயிற்சி எடுக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். பலவற்றை தியாகம் செய்ய வேண்டும். அவர் முதல் இடத்திற்கு வர அயராது பாடுபட்டுதான் வரவேண்டும் யாருக்கும் முதலிடம் என்பது அவ்வளவு சாதாரணமாக கிடைப்பது அல்ல. ஒரு டென்னிஸ் வீராங்கனியில் வெற்றி வாழ்க்கை எப்படி உயர்ந்தது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

மார்ட்டினா நவரத்திலோவா டென்னிஸ் விளையாட்டில் வீராங்கனையாக ஜொலித்தவர். 1983 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடத்தில் நின்றவர். கேத்தி என்ற மற்றொரு வீராங்கனையும் டென்னிஸ் பயிற்சியில் தீவிரமாக இருந்தார். உலக டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியலில் மார்ட்டினா முதலிடத்திலும், கேத்தி நாற்பத்து ஐந்தாவது இடத்திலும் இருந்தனர். பிரெஞ்ச் டென்னிஸ் போட்டியில் 1983ல் கேத்தி மார்ட்டினாவுடன் விளையாடும் ஒரு சூழல் வந்தது.

இதையும் படியுங்கள்:
மகிழ்வித்து மகிழ... சந்தோஷம் இரட்டிப்பாகும்!
Curiosity is the best start!

மார்ட்டினாவின் இடத்தையும் வெற்றியையும் நினைத்துப் பார்த்தால் கேத்தி அருகில் கூட வரமுடியாது. ஆனால் அந்த பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் மார்ட்டினாவை கேத்தி வீழ்த்தினார். அந்தப் போட்டி டையில் முடிந்தது. அதன் பின் போராடி டையில் நான்காவது சுற்றில் வெற்றி பெற்றார். அப்போது அவரிடம் “எப்படித் திட்டமிட்டு இப்படி வெற்றி பெற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு கேத்தி என்ற கேத்லீன் ஹாவர்த், "நான் வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே விளையாடினேன்" என்றார்.

நாற்பத்தைந்தாவது நிலையில் இருந்து முதல் நிலையை அடைவது என்பது சாதாரண காரியமல்ல. அபார நம்பிக்கையும், அயராத உழைப்பும், தீவிரமான பயிற்சியும்தான் கேத்தியை இப்படி உயர்ந்த இடத்துக்குக் கொண்டுவந்தது.

ஒரு விளையாட்டு வீராங்கனை முன்னுதாரணமாக எடுத்து நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக உங்கள் முயற்சி வெற்றி பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com