Deep Work: செயல் திறனை சிறப்பாக்கும் தந்திரம்!

Deep Work
Deep Work

நவீன உலகில் கவனச் சிதறல்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. செல்போன் அழைப்புகள், சோசியல் மீடியா அறிவிப்புகள், மின்னஞ்சல் மற்றும் பிற தொந்தரவுகள் நம் கவனத்தை சிதறடித்து நமது வேலைகளை செய்யவிடாமல் தடுக்கின்றன. இந்த சூழ்நிலையில் Deep Work என்னும் கருத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது கவனச் சித்திரங்கள் இல்லாமல் முழு கவனத்துடன் ஒரு குறிப்பிட்ட வேலையில் கவனம் செலுத்துவதே Deep Work ஆகும். இந்தப் பதிவில் இவ்வாறு எப்படி வேலை செய்வது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.  

  • Deep Work பயிற்சி செய்வதற்கான தந்திரங்கள்: 

  • எந்த கவனிச்சிருக்களும் இல்லாமல் வேலை செய்வதற்கு முதலில் ஒரு சரியான இடத்தை கண்டறிந்து அங்கு வேலை செய்யத் தொடங்குங்கள். அங்கு அதிகப்படியான பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

  • Deep Work செய்வதற்காகவே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் வேறு எந்த வேலையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது பெரும்பாலும் அதிகாலை அல்லது இரவு நேரமாக இருப்பது நல்லது. ஏனெனில் அச்சமயங்களில் நமக்கு மற்ற வேலைகள் அதிகமாக இருக்காது என்பதால், அந்த நேரத்தில் டீப் ஒர்க் செய்வது நல்லது. 

  • உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து வரும் அறிவிப்புகள் உங்கள் கவனத்தை சிதறடிக்காமல் இருக்க அதை ஸ்விட்ச் ஆப் செய்யுங்கள் அல்லது சைலன்ட் மோடில் போடுங்கள். டீப் ஒர்க் செய்யும்போது ஒருபோதும் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது. முடிந்தால் ஸ்மார்ட் ஃபோனை வேறு அறையில் வைத்து விடுங்கள். 

  • நீங்கள் ஒரு இரண்டு மணி நேரம் டீப் ஒர்க் செய்யப் போகிறீர்கள் என்றால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்து நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களது ஆற்றலை மீட்டெடுத்து மீண்டும் வேலையை செய்ய உதவும். 

  • தொடர்ச்சியாக டீப் ஒர்க் செய்து அதில் நீங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள் என்பதை கண்காணிக்கவும். இது உங்களது ஊக்கத்தை அதிகரித்து வேலைகளில் சிறப்பாக செயல்பட உதவும். 

இதையும் படியுங்கள்:
அதிக முதுகு வலியா? இவற்றை செய்தாலே போதுமே! 
Deep Work

Deep Work செய்வதன் நன்மைகள்: 

Deep Work செய்வதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை நீங்கள் முடிக்க முடியும். கவனச் சிறார்கள் இல்லாமல் வேலை செய்வதால், உங்களது வேலையின் தரத்தை மேம்படுத்தலாம். இச்சமயத்தில் உங்களுக்கு புதிய யோசனைகள் உருவாகி, வாழ்க்கையில் மேலும் பல சிறப்பான விஷயங்களை செய்வதற்கான உந்துதல் ஏற்படும். இவ்வாறு நாம் வேலைகளை சிறப்பாக செய்யும்போது நம் மன அழுத்தம் மற்றும் கவலை குறைந்து, மனநிலை எப்போதும் சிறப்பாக இருக்கும்.  

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது வேலைகளை சிறப்பாக செய்து இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள். மேலே குறிப்பிட்டுள்ள தந்திரங்களைப் பின்பற்றி Deep Work செய்வதால் உங்களது செயல்திறனை மேம்படுத்தி வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com