அதிக முதுகு வலியா? இவற்றை செய்தாலே போதுமே! 

Backpain
Backpain reasons and Remedies.
Published on

உங்களுக்கு அதிக முதுகு வலி இருக்கா? எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியவில்லையா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குதான். இன்றைய காலத்தில் முதுகு வலி என்பது பலரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இது அதிக சிரமத்தை ஏற்படுத்தி தினசரி வாழ்க்கையை கடினமாக்குகிறது. முதுகு வலி என்பது தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ இருக்கலாம். இந்தப் பதிவில் முதுகு வலிக்கான பொதுவான காரணங்கள் மற்றும் அதைக் குறைக்க உதவும் வழிகள் பற்றி பார்க்கலாம். 

முதுகு வலியின் காரணங்கள்: முதுகு வலிக்கு மிகவும் பொதுவான காரணமாக தசை மற்றும் தசைநார் காயங்கள் இருக்கின்றன. அதிக எடையை தூக்குதல், தவறான தோரணையில் அமர்வது அல்லது திடீரென ஏற்படும் அசைவுகள் போன்றவை தசை மற்றும் தசைநார் காயங்களுக்கு வழிவகுத்து, முதுகு வலியை ஏற்படுத்தும். 

மேலும், சிலருக்கு டிஸ்க் Herniation, முதுகெலும்பு Stenosis மற்றும் Spondylitis போன்ற முதுகெலும்பு பிரச்சனைகள் காரணமாகவும், முதுகில் அதிக வலி உண்டாகலாம். 

வயதானவர்களுக்கு ஆர்த்ரைட்டிஸ் போன்ற வாத நோய் காரணமாகவும் முதுகு மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும். 

அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது, குனிந்தபடியே வேலை செய்வது அல்லது அதிக எடையை தூக்க முயற்சிப்பது போன்றவை முதுகு வலி ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் சிலருக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக தசைகள் இறுக்கமாகி, முதுகில் வலியை ஏற்படுத்தலாம். 

 முதுகு வலியைக் குறைக்கும் வழிகள்: 

உங்களுக்கு இப்போதுதான் முதுகு வலி ஏற்பட்டுள்ளது என்றால், போதுமான அளவு ஓய்வு எடுத்தாலே அது சரியாகிவிடும். குறிப்பாக தசை மற்றும் தசைநார் காயங்களுக்கு அதிக ஓய்வு தேவை என்பதால், ஓய்வு எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

அதிக வலி இருந்தால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி வலி நிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம். 

முதுகு மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த லேசான உடற்பயிற்சிகள் செய்வதும் முதுகு வலிக்கு சரியாக உதவியாக இருக்கும். அல்லது ஒரு பிசியோதெரபி மருத்துவரை அணுகி பிசியோதெரபி செய்து கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
அதிக நேரம் அமர்ந்திருப்பதில் இவ்வளவு ஆபத்துக்கள் உள்ளதா?  
Backpain

அதிக மன அழுத்தமானது முதுகு தசைகளை இறுக்கி வலியை ஏற்படுத்தலாம். எனவே மன அழுத்த மேலாண்மை மிகவும் முக்கியம். நீங்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டாலே உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்ய முடியும். எனவே முறையான உடற்பயிற்சி, யோகா, தியானம், சுவாச பயிற்சிகள் போன்றவற்றின் மூலமாக, மன அழுத்தத்தைக் குறைக்க முயலுங்கள். 

இவற்றைப் பின்பற்றி உங்களது முதுகு வலியை நீங்கள் சரி செய்ய முடியும். மேலும், முதுகு வலி அதிகமாக இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வேறு ஏதேனும் காரணங்களால் கூட முதுகு வலி ஏற்படலாம். எனவே சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com