தீபக் சோப்ராவின் சிறந்த பொன்மொழிகள்!

motivational Mottoes...
Mottoes!
Published on

ந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரும், பிரபல அமெரிக்க எழுத்தாளருமான  தீபக் சோப்ரா 1946 இல் புது டெல்லியில் பிறந்தவர். தற்பொழுது அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

90க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களுக்காகவும் பேச்சுகளுக்காகவும் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவர். 

குவாண்டம் ஹீலிங் (Quantum Healing), த பாத் டு லவ் (The Path to Love) தி புக் ஆஃப் சீக்ரெட் (The Book of Secrets) போன்றவை இவர் எழுதிய பிரபலமான புத்தகங்களாகும். 

*ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான விதைகள் உள்ளன.

*செயல் இல்லாத அன்பு அர்த்தமற்றது மற்றும் அன்பு இல்லாத செயல் பொருத்த மற்றது.

*உடல் மனதை உருவாக்குவதில்லை, மனம்தான் உடலை உருவாக்குகிறது.

*உங்கள் உள்ளார்ந்த தெய்வீகத் தன்மையை கண்டறிவது உண்மையான வெற்றி ஆகும்.

*தியானம் என்பது மனதை தூய்மைப்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வழியாகும்.

*உண்மையைத் தேடுபவர்களுடன் நடந்து செல்லுங்கள். அதை கண்டுபிடித்ததாக நினைப்பவர்களிடமிருந்து விலகி ஓடுங்கள்.

*இந்த கணத்தில் நடக்கும் அனைத்தும் கடந்த காலத்தில் நீங்கள் செய்த தேர்வுகளின் விளைவாகும்.

*மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணிப் பார்ப்பது உண்மையிலேயே மூளையில் நேர்மறையான ரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது. இது நேர்மறையான உடல் மற்றும் உளவியல் நன்மைகளைத் தூண்டுகிறது.

*அனைத்து இலக்குகளிலும் இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் மற்றவரை மகிழ்வியுங்கள்.

*உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு மக்களை மாற்ற முயற்சிப்பதற்கு பதிலாக நீங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்கள் உறவுகள் முழுமையாக மலரும்.

*உங்கள் பிள்ளைகளை மாற்றுவதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மூன்று விஷயங்கள்: கவனம், பாராட்டு மற்றும் பாசம்.

இதையும் படியுங்கள்:
உங்களிடம் மன்னிக்கும் மனப்பக்குவம் இருக்கிறதா?
motivational Mottoes...

*நீங்கள் மேற்கொள்ளும் மிகவும் ஆக்கப்பூர்வமான செயல் உங்களை நீங்களே உருவாக்கும் செயல்தான்.

*தியானம் என்பது உங்கள் மனதை அமைதிப் படுத்துவதற்கான ஒரு வழி அல்ல. அது ஏற்கனவே அங்கே இருக்கும் அமைதிக்குள் நுழைவதற்கான ஒரு வழியாகும்.

*நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், மற்றவரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியான நபரை கண்டுபிடிக்க விரும்பினால், நீங்கள் சரியான நபராக இருங்கள். நீங்கள் இந்த உலகில் மாற்றத்தைக்காண விரும்பினால் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே மாறுங்கள்.

*உங்களுக்காக நீங்கள் கனவு கண்டதை விட மிகப் பெரிய திட்டங்களை பிரபஞ்சம் உங்களுக்காக வைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com