
அடுத்த கட்டத்திற்கு நகர விரும்பினால் மட்டும் போதாது. சில அடிப்படை தேவைகளை புரிந்துக்கொண்டு செயல்படுத்த வேண்டும். அவை குறித்து காண்போம்.
ஒரு சிலரால் முடிந்தால் மற்றவர்களாலும் முடியும் என்பதை உணர வேண்டும். வேண்டியதை அடைய ஆசைப்படுவதுடன் அதை அடையமுடியும் என்ற எதிர்பார்ப்பையும் வளர்த்துக்கொண்டு அதற்கு உண்டான செயல்பாடுகளில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.
எதுவும் இந்த போட்டிகள் நிறைந்த நிதர்சனமான உலகில் சுலபமாக கிடைத்துவிடாது என்பதை நம்பவேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வது, ஆசைப்படுவது எல்லாம் முதல் படியாக இருக்கலாம். அது மட்டும் வேண்டியவற்றை அடைய வழி வகுக்காது.
தனிப்பட்ட நபர்தான் உழைக்கவேண்டும், பாடுபட வேண்டும். சாதித்தவர்கள் அடிமட்டத்தில் இருந்து எப்படி அடி மேல் அடி வைத்து அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளவும், புரிந்துக்கொள்ளவும் ஆர்வத்தை காட்ட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் எதிர்கொண்ட சவால்கள், தடங்கல்கள் எவை என்றும் அவற்றை கடந்து வர அவர்கள் மேற்கண்ட வழிமுறைகள், கையாண்ட நடவடிக்கைகள், செய்த தியாகங்கள், செய்துகொண்ட சமரசங்கள் போன்ற முக்கிய விவரங்கள் முன்னேற துடிக்கும் தனி நபருக்கு மிக்க நம்பிக்கை அளிப்பதுடன் உந்து கோலாக செயல்படுமென்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
ஆசை மற்றும் எதிர்பார்ப்பை அடித்தளமாகக் கொண்டு முன்னேற முயற்ச்சி செய்பவர்களுக்கு இவை இரண்டும் ஆர்வத்தை உண்டு செய்வதுடன் உள் மனதில் சாதிக்க வேண்டும் என்ற நேர்மறை வெறியை தூண்டும்.
முன்னேற்றி செல்ல சிந்திக்க வைக்கும் திறனை பட்டைத் தீட்டிக் கொள்ளவும் வழி காட்டும்.
இலக்கை அடையவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும், சேர்ந்து நேர்மறை செயல்பாடுகளில் ஈடுபடச் செய்து, முடியும் என்பதை நிரூபிக்க வைக்க தேவையான எல்லா வகை நடவடிகைகளையும் எடுக்கவைக்கும்.
அப்படி ஆசை, எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டு முன்னேற நினைக்கும் தனி நபர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து முன்னேறி இலக்கை அடைந்தே தீர்வேன் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டு பின் வாங்காமல் முன்னோக்கி தொடர தயார் நிலையில் இருப்பேன் என்ற சுய உறுதிமொழி எடுத்துக்கொண்டு தவறாமல் பின் பற்றினால் அதுவே முன்னேறவும், சாதிக்கவும் இடைவிடாத தூண்டு கோலாக பெரிதும் உதவும் என்பதும் நிதர்சனமான உண்மை.
ஆசை, எதிர்பார்ப்பு இரண்டும் கட்டாயமாக அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி வெற்றி இலக்கை அடைய செய்து அழகு பார்க்கும் அளவிற்கு வலுவானவை. தொடர்ந்து நேர்மறை எண்ணங்களை சிந்திக்க வைத்து செயல்பட செய்யும்.