உற்சாகம் குறைந்தால் அவநம்பிக்கை வரும்!

 Motivation Articles!
Motivation Articles!
Published on

லகில் வாழும் எல்லா உயிர் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை. மனிதராகிய நம் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும்,  நம்பிக்கை இன்மையும் ஊற்று எடுக்கின்றன. வாழ்க்கை என்பதே உற்சாகமாய் வாழத்தானே..? செயலில் தோல்வி அடைந்தால், அதற்காக ஏன் எரிச்சல் கொள்ள வேண்டும்.?

முதலில் நாம் சந்தித்தது தோல்வி அல்ல. ஆனால், அதை நினைத்து. நினைத்து உற்சாகம் இன்றி வேதனையும் எரிச்சலுமாக இருந்தால் அதுதான் நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ள வழி வகுக்கும். நம்மிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர் சுட்டிக்காட்டும் போது கோபப்படாமல் அதனை திருத்தி கொள்ள வேண்டும்.

நம் தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படக் கூடாது. உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்று விடாது. விரலைச் சுற்றி வரும்.எங்கே வழி இருக்கிறது என்று நாலா பக்கமும் தேடும்.

எத்தனை தடைகள் போட்டாலும் எப்படியாவது தன் பயணத்தைத் தொடரும். செத்து விழும்வரை அது தன் உற்சாகத்தை இழப்பதும் இல்லை; நம்பிக்கையை விட்டுவதும் இல்லை.

இதையும் படியுங்கள்:
உடல் மற்றும் மனச்சோர்வை நீக்கும் யர்சகும்பா!
 Motivation Articles!

சிறு புல்லைப் பறித்து அதன் வேர்களைப் பாருங்கள். என்னவொரு உற்சாகத்துடன் பூமியில் உள்ளே ஆழமாக கிளை விட்டு அவை ஊன்றிக் கொண்டு இருக்கின்றன என்று புரியும். நீங்கள் ஒருபோதும் உங்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல், எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

உங்களிடம் இருக்கும் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார்தான் நம்புவார்கள். அளவுக்கு அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும், முக இறுக்கத்துடன் இல்லாமல், சிரித்த முகத்துடன் இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை உங்களிடம் அதிக பலம் பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com