முழு மனதோடு செய்தால் வெற்றி கிடைக்கும்!

Do it wholeheartedly and you will succeed!
Success Image credit - pixabay
Published on

னித வாழ்வு அழகு பெறுவது செயல்களை மிக நேர்த்தியாய்ச் செய்து முடிப்பதால் மட்டுமல்ல. எந்தச் செயலைச் செய்தாலும் அதை மனமுவந்து, முழு ஈடுபாட்டுடன் செய்வதால்தான் அது அழகு பெறுகிறது.

நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் தரையைத் துடைக்கிறோமோ, ஒரு தொழிலை மேலாண்மை செய்கிறோமோ, எந்தச் செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

செய்யும் அந்தச் செயலை மனமுவந்து, முழு ஈடுபாட்டுடன் செய்தால், வேலை செய்வதே மிக அழகான ஒரு அனுபவமாக இருக்கும் நாம் நமது தொழில் பணி சார்ந்த எந்தச் செயல்களையும், நிகழ்வுகளையும் ஈடுபாட்டுடன் மனம் ஒன்றிச் செய்யவேண்டும்.

அப்படிச் செய்யப்படும் செயல்கள்  பல வெற்றிகளை ஈட்டித் தரும்., அதன் வெற்றி பல மடங்காகும். அதனால் நமக்குப் பலவிதமான நன்மையைத்தரும்.

எதைச் செய்தாலும் அதனை முழு ஈடுபாட்டுடன் முழுமையாகவும், முறையாகவும், முதன்மையாகவும் செய்ய வேண்டும் என்ற தாகம் எப்பொழுதும் நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

எதையும் ஈடுபாட்டோடு செய்யும் பொழுது அந்தச் செயலும், நாமும் ஒரு மேன்மை நிலையை எட்டுகிறோம்.

இதையும் படியுங்கள்:
மௌனமும் புன்னகையும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள்!
Do it wholeheartedly and you will succeed!

ஈடுபாட்டோடும், அக்கறையுடன் உந்துத் திறனோடும் செய்தால் அதில் வெற்றி நிச்சயம். ஆனால் எதையும் விருப்பம் இல்லாமல் எனோதானோ என்று செய்தால் அது தோல்வியில் கொண்டு போய் சேர்த்து விடும்.

முழுமையான ஈடுபாட்டுடன்  செய்யும்போது, வெற்றி கிடைப்பதோடு அதில் நமது திறமையும் பன்மடங்காக வெளிப்படும், செய்யும் செயல் அழகாகும். பணியைச் செய்பவனின் முழுத்திறமையும், ஆற்றலும் அனைவருக்கும் புலப்படும்.

எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வதை உங்கள் வ(ப)ழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள் மனதில் ஊக்கமும், உந்துத் திறனும் நிறைந்திருக்கும் பொழுது, செய்யும் வேலையில் ஈடுபாடும், முன்னேற்றமும் ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com