சந்தேகம் என்னும் கொடிய நோய் வேண்டாமே..!

Motivation article
Motivation articleImage credit - pixabay.com
Published on

ரு குடும்பம் சரிவை நோக்கி செல்கிறது என்றால் அந்த குடும்பத்தில் சந்தேகம் என்ற வியாதி தொற்றி இருக்கிறது என்று அர்த்தம். எந்த ஒரு வீட்டில் சந்தேகப்படும் அளவிற்கு நம் மனநிலையில் வாழ்கிறோமோ அப்பொழுது அந்த குடும்பம் சிறு குலைந்து போய்விடுகிறது. அழகான குடும்பம் கூட உரு தெரியாமல் போய்விடும் இந்த சந்தேகம் என்ற நோயை நாம் விரட்டாவிட்டால்.

கணவரிடம் மனைவிக்கோ, மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் சாத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் நிபுணர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனையை கேளுங்களேன்.

பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் நிபுணர்களின் முதல் அறிவுரை. அதேபோல் மனைவி எந்த ஆணுடனும் பேசக்கூடாது, வீட்டு வாசலில் நிற்கக்கூடாது, செல்போனில் பேசக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் கணவன்மார்கள்.

அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மனைவி இருக்கவேண்டும். எதிர்த்துப் பேசினால் திட்டும் அடி உதையும் கிடைக்கும். அதே நேரம் கணவன்களை மனைவிகள் அவ்வளவாக சந்தேகப்படுவது கிடையாது. அரசல் புரசலாக வதந்தி கிளம்பி சந்தேகம் வந்தால் கூட கணவன் சொல்லும் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள். 

அதேபோல் தனது துணைக்கு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும். உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்புபடுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள். இதுவே பிரச்சினை விதை முளைக்க காரணமாகிவிடும்.

தனது சந்தேகத்தை நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.

கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி, தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரியவைக்க வேண்டியது அவசியம். அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
எதையும் ஒத்திப் போடுதல் சரியா..?
Motivation article

சந்தேகம் அதிகமாக அதிகமாக மனதில் சஞ்சலம் குடியேறுவதோடு ஒருவித அழுத்தம் ஏற்பட்டுவிடும். இதுவே நாளடைவில் மனரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும். இதனால்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர். 

ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான் நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள் மருத்துவர்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள் அப்புறம் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com