நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், நம் முயற்சிகளை குறை சொல்வதற்கு என்றே சிலர் இருப்பார்கள். இவர்களை எப்போதுமே திருப்திப்படுத்த முடியாது. அப்படி அவர்கள் நம்மை குறை சொல்லும் போதெல்லாம் காது கேட்காதது போல இருந்து விடுவது எவ்வளவு நல்லது தெரியுமா? இந்த கதையை படியுங்கள் ஏன்னு உங்களுக்கே புரியும்.
ஒருநாள் பத்து தவளைகள் அடைக்கலம் தேடி மலையடிவாரத்தில் குதித்து போய்க்கொண்டிருந்தன. அப்போது அதிலிருந்த இரண்டு தவளைகள் தெரியாமல் ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து விடுகிறது. மேலே இருக்கும் தவளைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பள்ளத்தில் இருக்கும் இரண்டு தவளைகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டு தவளைகளும் குதித்து பார்க்கிறது. அந்த தவளைகளால் வெளியே வரவே முடியவில்லை. ஏனெனில், அது பெரிய பள்ளம்.
கொஞ்சம் நேரம் கழித்து மேலே இருக்கும் தவளைகள் சொல்கிறது, ‘ இனி உங்களால் வெளியிலே வரவே முடியாது. தேவையில்லாமல் முயற்சி செய்து எனர்ஜியை வீணாக்காமல் அங்கேயே அமைதியாக இருந்து இறந்துவிடுங்கள்’ என்று அந்த தவளைகளை Demotivate செய்துக் கொண்டேயிருக்கின்றன. இதை கேட்ட இரண்டு தவளையில் ஒரு தவளை தன்னால் மேலே போகவே முடியாது என்று மனம் தளர்ந்து மூச்சி திணறி இறந்துவிடுகிறது.
ஆனால் அந்த பள்ளத்திலிருந்த இன்னொரு தவளை முயற்சி செய்வதை நிறுத்தவேயில்லை. எட்டுமணி நேரம் கழித்து, அந்த குழியிலிருந்து குதித்தே மேலே வருகிறது.
அதை பார்த்த மற்ற தவளைகள், ‘நாங்கள் உன்னை எவ்வளவு Demotivate பண்ணியும் எப்படி மேலே வந்தாய்?’ என்று கேட்டது. அதற்கு அந்த தவளை சொன்னது, ‘என்னது? என்னை எல்லோரும் Demotivate பண்ணுனீங்களா? எனக்கு சரியாக காது கேட்காது. என்னை நீங்கள் எல்லோரும் ஊக்கப்படுத்துகிறீர்கள் என்று நினைத்து தான் மேலே வந்தேன்’ என்று சொன்னது.
இதே மாதிரிதான் நம்முடைய வாழ்கையிலேயும் நம்மை நிறைய பேர் இறக்கி பேசவும், குறை சொல்லவும், Demotivate பண்ணுவதற்கும் வருவார்கள். அப்போதெல்லாம், நாமும் காது கேட்காதது போலவே இருந்துவிடுவோம். நம்முடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும். நம் மனதுக்கு பிடித்த காரியங்களை செய்து வாழ்க்கையில் வெற்றி அடையலாம். முயற்சித்துப் பாருங்களேன்.