விரும்பிச் செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்!

Motivational articles
succes formula
Published on

ங்கள் வாழ்க்கையில் தொடரும், எந்த நல்ல செயலையும் மனம் விரும்பிச் செய்யுங்கள். மனம் விரும்பாமல், வேண்டா வெறுப்புடன் செய்யும் செயல்களில் வெற்றிபெற முடியாது.

விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் செய்யும் செயலே வெற்றி பெறும். விருப்பம் இல்லாவிட்டால் எந்தச் செயலையும். எப்பொழுதும் செய்யாதீர்கள்.

பள்ளியில் படிக்கிறீர்களா! எந்தத் துறையில் ஆர்வம் மிகுதியாக இருக்கிறது. உங்களின் எதிர்காலம் அத்துறையில் பிரகாசிக்க முடியுமா! அதற்கான தன்னம்பிக்கை உங்களிடம் உள்ளதா?

ஒரே முடிவாக இருக்கிறீர்களா. ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்துப், பின் செயல்படுங்கள்.

ஒரு செயலைச் செய்யும்முன் பலமுறை யோசிக்கலாம். நன்கு சிந்தித்து, நல்ல முடிவெடுத்த பின் அச்செயலைச் செயலாற்றலாம். அதை விடுத்து மனம்போன போக்கில் எதையாவது ஆரம்பித்துவிட்டு. தொடர்ந்து செய்யலாமா வேண்டாமா எனக் குழப்பிக் கொள்ளவேண்டாம்.

ஒரு முகமாகச் செயல்பட்டால்தான் வெற்றியின் இலக்கை அடைய முடியும். பத்தாம் வகுப்பு முடித்த மாணவன், அடுத்த வகுப்பில் எந்தப் பிரிவில் சேர்வது என்று குழப்பத்துடன் இருப்பான். ஏனென்றால் அவனை அனைவரும் போட்டுக் குழப்பி இருப்பார்கள்.

அவரவர்க்குப் பிடித்தமான பாடத்தை அவனிடம் கூறி இருப்பார்கள். மற்றவர்கள் அவனின் எதிர்காலம் நலன் கருதிக் கூறினாலும், படிப்பவன் அவன்.

எனவே அவனுக்கு என்ன பாடத்தில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றதோ. அந்தப் பாடத்தையே அவன் தேர்வு செய்து படிக்கட்டும். அப்பொழுதுதான் அப்பாடத்தில். அவன் சிறப்பான தேர்ச்சி பெறமுடியும்.

பிறர் கூறியதற்காக எந்தப் பாடத்தையாவது விருப்பம் இல்லாமல் எடுத்துப் படித்தால், படிப்பில் அவன் ஆர்வம் குன்றிவிடும்.

இதையும் படியுங்கள்:
அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா?
Motivational articles

பெற்றோர்களின் ஆசைக்காக, தம் பிள்ளைகளை பொறியாளராகவோ, மருத்துவராகவோ மாற்றிவிட முடியாது. படிக்கும் பிள்ளைக்கும் அத்துறையில் விருப்பம் வேண்டும். அப்பொழுதுதான் அவனால். அத்துறையில் ஈடுபாட்டுடன் படிக்க முடியும்.

அவனுக்கும் ஆர்வம் இல்லாமல் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள் என சேர்த்துவிட்டால், வருட முடிவில் மதிப்பெண் குறைத்து எடுத்திருந்தாலோ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலோ என்ன செய்ய முடியும்.

அதற்காக மாணவனை என்றும் குறை சொல்ல முடியாதல்லவா! மாணவனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லையென்றால், வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடம் எதுவும் முழுமையாய்ப் புரிந்து கொள்ளவும் முடியாது.

புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காகத் தன் ஆசிரியரிடமும் அடிக்கடி சந்தேகம் கேட்டால் சொல்வாரா அல்லது திட்டுவாரா என்றும் தனக்குள் முடிவு செய்வான். வகுப்பில் இத்தனை பிள்ளைகளுக்குப் புரியும் பாடம். உனக்கு மட்டும் என்ன புரியவில்லையா என நகைப்புக்கும் இடம் தரலாமா எனவும் சிந்திப்பான்.

இதனால் கொஞ்சமாக இருந்த ஆர்வமும் முழுமையாய்க் காணாமல் போய்விடும். பிறகு எப்படி அவன் அத்துறையில் தேறி வெற்றி பெற முடியும். இதுபோல் இன்று பல வீடுகளிலும் பிள்ளைகளின் விருப்பத்தை உணர்ந்து பெற்றோர் செயல்படுவதே இல்லை. ஒரு மாணவன் சமையற்கலை பற்றி படிக்க விரும்புகிறான். அல்லது இசைத் துறையில் ஆர்வம் கொள்கிறான்.

உனக்கு அத்துறையில்தான் விருப்பமா என விட்டு விடவேண்டும். அதெல்லாம் முடியாது. நாங்கள் கூறுகின்ற பாடத்தைத்தான் எடுத்துப் பயில வேண்டும் என பெற்றோர் அடம்பிடிக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
ஊக்கத்தின் ஊற்றாக நேர்மறை வலுவூட்டல்: பாராட்டு, வெகுமதி, ஊக்கத்தின் வலிமை
Motivational articles

தனிமையில் சிறிது நேரம் யோசித்துப் பாருங்கள். எல்லாத்துறையிலும் சாதித்துப் பெருமை படைத்த வர்களும் இருக்கிறார்களே. அவர்களைப்போல நாமும் வரவேண்டும் என மாணவர் நினைக்க வேண்டும். நம் பிள்ளை சாதனை படைப்பார் என்ற நம்பிக்கையுடன், பெற்றோரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்.

பழைய இரும்பு வியாபாரம் முதல் கருவாடு வரை வரும் சாதனை செய்திருக்கிறார்கள். தொழிலிலும் எதுவும் ஏற்றத்தாழ்வு என்பதும் இல்லை.

உங்கள் மனதுக்குப் பிடித்ததை, சட்டவிரோதம் இல்லாமல், பிறரைப் பாதிக்காமலும் செய்யுங்கள். வேறு எந்த விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாமல், செய்து முன்னேற்றம் அடையுங்கள்! உங்களால் சாதிக்க முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com