நம் அனைவருக்குமே வாழ்வில் எதாவது ஒரு லட்சியம் அல்லது பெரு விருப்பம் இருக்கும். திறமை, தீவிர முயற்சி இருந்தாலும் சில சமயம் வெற்றி தள்ளிப்போகும். இந்த மனக்குறை தீர உதவும் ஒரு உளவியல் பூர்வமான அணுகுமுறையைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதைப் போல நடிக்கும் டெக்னிக்;
வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு அற்புதமான டெக்னிக் என்ன தெரியுமா? ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதைப் போல நடிப்பது தான். இந்த உத்தியை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. தனிப்பட்ட ஆசைகளை கண்டுபிடிங்கள்; உங்களுக்கு என்றே பிரத்தியேகமாக இருக்கும் ஆசைகளை முதலில் கண்டுபிடியுங்கள். நீங்கள் தன்னம்பிக்கை நிரம்பியவராக மாற வேண்டுமா? தலைமைப் பதவி வேண்டுமா? பணக்காரனாக வேண்டுமா? பாடகராக, எழுத்தாளராக, முன்னணி பிசினஸ் மேன் ஆக வேண்டுமா? இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கான உங்களது திறமைகளையும் மெருகேற்றுங்கள்.
2. கூர்ந்து கவனியுங்கள்; நீங்கள் சாதிக்க விரும்பும் துறையில் பிரபலமாக உள்ள ஆட்களை கூர்ந்து கவனியுங்கள். அவர்களுடைய நடவடிக்கை உடல் மொழி எப்படி அவர்கள் பல்வேறு வகையான சூழ்நிலைகளை கையாளுகிறார்கள், பிறருடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம் என்று எல்லாவற்றையும் கவனியுங்கள்.
3. மிமிக்ரி பிஹேவியர்; உங்களுக்கு மிகவும் பிடித்த ரோல் மாடலை அப்படியே இமிடேட் செய்யுங்கள். அவர்களைப் போலவே நேராக நின்று தைரியத்துடன் பேசுங்கள். அவர்களுடைய உடல் மொழியையும் சைகையையும் பயன்படுத்துங்கள். அவர்களைப் போல நீங்கள் நடிப்பதால் உங்களுடைய மனோநிலையை நீங்கள் கவர்கிறீர்கள்.
4. நேர்மறையான சுயகருத்தேற்றம் (affirmative auto suggestion); உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களால் நிரப்புங்கள். நீங்கள் விரும்பும் திறமைகளும் தகுதியும் உங்களுக்குள் இருப்பதாக நம்புங்கள். அதை தினமும் ஒரு ஒற்றை வாக்கியமாக சொல்லி வாருங்கள்.
‘’நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்’, ‘நான் ஒரு சிறந்த தலைவன்’ நான் ஒரு பெரும் செல்வந்தன்’’ என்று சொல்லி வாருங்கள்.
5. காட்சிப்படுத்திப் பாருங்கள்
உங்களுடைய இலக்கை அடைந்து விட்டது போலக் கண்ணில் பார்த்து வாருங்கள். பல மேடைகளில் நீங்கள் மக்களைப் பார்த்து பேசுவது போலவும், ஒரு பெரிய குழுவிற்கு தலைவராக இருப்பது போலவும், சிக்கலான சூழ்நிலைகளை கையாள்வது போலவும் நினைத்து பாருங்கள். மனதில் பார்க்கும் அந்த காட்சிகள் உங்களுக்குள் நேர்மறையான நடவடிக்கைகளை உங்களுக்குள் விதைக்கும்.
மேற்கண்ட ஐந்து பயிற்சிகளையும் தினந்தோறும் செய்து பாருங்கள். தினமும் செய்து வந்தால் அவை இயற்கை யாகவே உங்களின் இயல்பாகவே மாறி உங்களுக்கு வேண்டியதை கொண்டு வந்து தந்துவிடும். நீங்களும் விரைவில் உங்கள் இலக்கை அடையமுடியும்.