புகழும் செல்வாக்கும் எப்படி வரும் தெரியுமா?

Do you know how fame and influence come?
A science story
Published on

ரு விஞ்ஞானக் கதை உண்டு. 50 வருடங்களுக்கு முன் இந்திய விஞ்ஞானிகள் கடவுள் முன் கூடி, "மரணத்தைத் தள்ளிப்போடும் மருந்துகளைப் கண்டு பிடித்துவிடடோம். உயிரை உருவாக்கக் கற்று விட்டோம். உணவையும், தண்ணீரையும் தேவையான அளவுக்கு தயாரித்து விட்டோம். உலகத்தின் ஈந்த மூலையிலும் நடப்பதை கவனிக்கும் திறமை பெற்று விட்டோம். எல்லா வேலைகளையும் நாங்களே செய்ய முடிகிறபோது நீ எதற்கு? பேசாமல் ஓய்வு பெறுங்கள்"  என்றனர். கடவுள் சிரித்தார். ஏதாவது ஒன்றை படைத்துக் காட்டுங்கள். நான் ஓய்வு பெறுகிறேன்"என்றார் கடவுள். 

விஞ்ஞானி ஒருவர் பக்கத்தில் இருந்த களிமண்ணை  காட்டி இதை உயிராக்கிக் காட்டட்டுமா என்றார். அது நான் கொடுத்ததாயிற்றே என்றார் கடவுள். விஞ்ஞானிகள் தலை குனிந்தனர்.

இயற்கை தந்ததை ஆதிமனிதன் தனக்குத் தெரிந்தவரை பயன்படுத்தினான். கற்களை ஆயுதமாக்கினான். மண்கலங்கள் செய்தான். மரங்களால் வீடுகள் அமைத்தான். ஆனால் நீங்களோ இயற்கை தந்த பொருட்களை வைத்து வெடிகுண்டுகளையும், அணு மின் நிலையங்களையும் உருவாக்குகிறீர்கள்.  ராக்கெட்டுகள் ஆகவும், விண்வெளிக்கலன்களாகவும் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் கண்டுபிடிக்காமல்  விட்டவைகளை அடுத்த தலைமுறை கண்டு பிடிக்கும் அவ்வளவுதான்.

பூமி உருவான தினத்திலிருந்தே காற்று இருக்கிறது.  பல்வேறு அலைவரிசைகளைத் தனித்தனியே கொண்டு சேர்க்கும் சக்தியை அன்றிலிருந்தே அது தனக்குள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை கவனித்து மனிதன் தொலைக்காட்சி, செல் ஃபோன் போன்றவற்றை மனிதன் தயாரிக்க  பல வருடங்கள் ஆனது. ஏற்கெனெவே இருந்ததைத்தான் மாற்றி அமைக்கிறீர்கள்‌ புதிதாக கண்டுபிடித்தது என்று எப்படி பெருமை கொள்ளமுடியும். 

இதையும் படியுங்கள்:
மாற்றி யோசிப்போம்… நிச்சயம் மாற்றம் வரும்!
Do you know how fame and influence come?

நீங்கள் ஓவியராகவோ, பாடகராகவோ, எழுத்தாளராகவோ இருக்கலாம். நீங்கள் செய்வது உங்களுக்கு ஆனந்தத்தைத்‌ தரவேண்டும்.  அப்போதுதான் உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியும். அப்படி வெளிப்படுத்தும் விதத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க நீங்கள் உபயோகமாக இருக்கிறீர்களா?.அது போதும். சிறந்த  படைப்பாளி என்று கொண்டாடப்படுவதை விட அது மேன்மையானது. உங்களை விட அடுத்தவர் செல்வாக்கான இருந்தால் இருந்து விட்டு போகட்டும். உங்களை குறைத்து மதிப்பிட்டும் போகட்டும்.

நீங்கள் எந்த மதத்திலிருந்து வந்தாலும் உங்கள் கடவுள் எப்படி இருக்கிறார்? அவர் மீது பூச்சொரிந்து பூஜிப்பதால் உடனே சலுகைகள் காட்டுவதுமில்லை.‌ அவரை திட்டுவதால்  தண்டனை கொடுப்பதும் இல்லை. போற்றுதலையும், ஏசுதலையும் பொருட்படுத்தாமல் அவருடைய செயலை நூறு சதவீதம் ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்கிறார். உண்மையான படைப்பாளிக்கு அதுதானே அழகு. 

கலைத்துறை என்றில்லை. எந்தத் துறையாக இருந்தாலும் உங்களுக்கு மட்டுமல்லாது, சுற்றியுள்ளவர்களுக்கும் ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள். அன்பைக்  குழைத்து உங்கள் திறமையை முழு ஈடடுபாட்டுடன் வெளிப்படுத்துங்கள். புகழும் செல்வாக்கும் தாமாகவே வந்து சேரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com