
மனித வாழ்க்கை பலவித கோணங்களைக்கொண்டது. வாழ்வியல் ரீதியாக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்றம், இறக்கம், நல்லது, கெட்டது, இன்பம், துன்பம் இருப்பது போல நல்ல எண்ணம், தீயஎண்ணம் குடிேறியுள்ளது. நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை தீய எண்ணம் உட்புகுந்து பலவகைகளில் ஆட்டிப்படைத்துவிடுகிறதே! அதை சரி செய்யுங்கள்!
"நல்ல எண்ணமே சிறந்த பண்பாடாகும்"ஒவ்வொருவர் வாழ்விலும் மனதிலும் பொதுவாக நல்ல எண்ணமே மேலோங்கி இருக்கவேண்டும். நாம் நினைக்கும் நல்ல எண்ணம் உயிா்போன்றவை. எந்த நிலையிலும் அடுத்தவர்களுக்கு எத்தகைய தருணத்திலும் தீங்கு செய்யவே கூடாது.
அந்த தீங்கானது சில நேரம் சுவற்றில் அடித்த பந்து போல நம்மிடமே திரும்ப வரும் வாய்ப்பே அதிகம். "நல்லவர் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு அனைவர்க்கும் வா்ஷிக்குமாம் மழை", என்பதுபோல நல்லவன் வாழ்வான் எனும் நியதியைக்கடைபிடித்து வாழ்ந்தாலே பிபஞ்சம் நம்மிடம் துணையாக வருமே!
"தீய எண்ணங்கள் நம்மையே அழித்துவிடும்" ஒரு செயல்பாடு இருந்தால் அதற்கு மாற்றாக ஒரு செயல்பாடு, வளா்ந்து கொண்டேதான் இருக்கும். அதில் நாம் தீய எண்ணங்களின் வழியில் பயணம் செய்வது தவறான ஒன்றாகும். தீயவை நம்மிடம் குடிபுகுந்துவிட்டால் அவ்வளவு விரைவில் நம்மை விட்டு அகலாது. அடுத்தவர்கள் வாழக்கூடாது.
அவர்கள் வளர்ந்து முன்னேறக்கூடாது நாசமாகப்போய் விடவேண்டும், என்ற கெடுமதியான நிலை நம்மனதைவிட்டு அகல வேண்டும். அடுத்தவர் களைக்கண்டு பொறாமைப்படக்கூடாது.
அது நமக்கே ஆபத்தாக முடியும். கெடுவான் கேடு நினைப்பான் என்பதுபோல தீய மனப்பான்மையானது நம்மைவிட்டு அகல மறுத்தாலும் நமது சிந்தனையானது, எதிா்மறை சக்தி உள்ளதாக அமையக்கூடாது.
எனவே நாம் வாழ்வில் முன்னேற்றம் அடைய நல்ல வழியைத்தேடுவோம். தீய வழியை விரட்டுவோம். நல்ல விதையை நடு. நல்லதையே அறுவடை செய். அதில் தீமை எனும் களைகளை அகற்றிவிடு. வாழ்க்கை எனும் பயிா் நன்கு வளர்ந்து அமோக மகசூல் பெறலாம். நல்லதை நினைப்போம் நலம் பல பெற்று வாழ்வோம்!