நமக்கான வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?


Do you know how to take advantage of our opportunity?
oppurtunities
Published on

சாலைகளில் என்ன நடந்தாலும் சரி பிறருக்கு என்ன நடந்தாலும் சரி நமக்கு என்ன என கடந்து செல்பவர்கள் பலர். ஆனால்  அது என்ன பிரச்னை எப்படி தீர்க்க முடியும் என சாமர்த்தியமாக இருந்து பிரச்னை தீர்ப்பவர்கள் பல பேர். அவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றியாளராக மாறுகிறார்கள். வாய்ப்புகளும் அவர்களைத்தேடி வருகின்றன.

வாய்ப்பு என்ற சந்தர்ப்பம்  நமக்கு அமையும்பொழுது அதை சாமர்த்தியமாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்

எப்படி கற்றுக்கொண்டால் நாம் நிச்சயமாக ஒரு படி முன்னே செல்லலாம். அப்படி நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை ஒரு இளைஞன் தன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொண்டான் என்பதே இப்பதிவு.

ஒரு வசதிமிக்க பெரியவர் தனது காரை ஓட்டிக்கொண்டு வெகுதொலைவு பயணம் செய்தார். திடீரென்று ஓர் இடத்தில் கார் பழுது ஆகிவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு கோளாறைச் சரிசெய்ய முயற்சித்தார். ஆனாலும் கார் கிளம்பவில்லை. இதைத் தொலைவிலிருந்து கவனித்த ஓர் இளைஞர் அருகில் வந்தார். "ஐயா, தாங்கள் அனுமதித்தால் நான் என்ன கோளாறு என்று பார்ப்பேன்?" என்று கேட்டார். பெரியவர் அனுமதி தந்தார். இளைஞர் ஒரு பத்து நிமிடம் கழித்து வண்டியின் கோளாறைச் சரிசெய்ததுடன், எங்கே பிரச்னை என்பதையும் பெரியவரிடம் விளக்கினார்.

உடனே பெரியவர் நன்றியோடு அந்த இளைஞருக்கு ஓர் ஐம்பது ரூபாயை எடுத்துக்கொடுத்தார். இளைஞர் அதை வாங்க மறுத்துவிட்டு "ஐயா, உங்கள் முகவரியைத் தாருங்கள் எனக்கு நன்றாகக் கார் ஓட்டவும், மெக்கானிக் வேலை செய்யவும் தெரியும். நம்பிக்கையோடும் நான் நடந்துகொள்வேன். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாகச் சரியான வேலை கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் சிபாரிசு செய்து ஏதாவது ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்தால் மகிழ்வேன்" என்றார். பெரியவர் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். மறுவாரம் அந்தப் பெரியவரின் டிரைவராக மாறினார் இளைஞர்.

இதையும் படியுங்கள்:
ஒழுங்கை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்!

Do you know how to take advantage of our opportunity?

தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார் இந்த இளைஞர். தன்னைச் சரியாக வெளிப்படுத்திக் கற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் சிறப்பானதையே வழங்குகிறது.

"நல்ல எண்ணம் நல்ல செயல்முகத்திற்கு அழகைக் கூட்டுகிறது" எனவே நல்ல எண்ணமும் செயல்பாடும் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் அதே போல் வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். அதிலிருந்து முன்னேற பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com