குழந்தைகளுக்கு நாம் எப்படி முன்னுதாரணமாக இருப்பது தெரியுமா?

Motivation image
Motivation imagepixabay.com

-வசந்தா மாரிமுத்து

பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது .

எல்லோரது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் வரும். யாரும் தனக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியில் சொல்வதில்லை.

குழந்தைகள் நாம் சொல்வதிலிருந்து இல்லை, செய்வதிலிருந்துதான் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்.

பெற்றோரிடமிருந்து பேச்சு, செயல்கள், குணங்கள் இவைகள் குழந்தைகளிடமும் பிரதிபலிக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முறையில் முன்னுதாரணமாக இருக்க சிலவற்றை பின்பற்றலாம்.

எல்லோரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துங்கள். குழந்தைகளும் உறவுகளை தெரிந்து மதிப்பார்கள். பொருட்களை தாண்டி மனிதர்களே முக்கியம் என்பதை உணர்த்துங்கள்.

எளிதான வேலைகளை, செயல்களை மட்டுமே செய்யாமல், சவாலானவற்றை முயற்சி செய்து, பயத்தை கடந்து நீங்கள் செய்வதைப் பார்த்து குழந்தைகளும் துணிச்சல் பெறுவார்கள். நேர்மறை சிந்தனையை அவர்கள் பெறுவார்கள்.

தேர்வில் மதிப்பெண் குறைந்தாலோ, விளையாட்டில் சக குழந்தைகளிடம் சச்சரவு, தோல்விகள் வரும்போது ஆறுதல் கூறி, அந்த தடைகளை  நான் எப்படி மீண்டு வந்தேன் என்று உணர்த்தி அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியம் கொடுங்கள்.

சிக்கல், குழப்பம் வரும் தருணங்களில் அடுத்தவர்களிடம் கேட்டு, கவலைப்பட்டு தயங்காமல் மனசுக்கு சரி என்று பட்டதை செய்யுங்கள். இதனால், குழந்தைகளும் கற்றுக் கொள்ள முடியும்.

அடுத்தவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணத்தையும், வெற்றிகளைக் கொண்டாடும்  மனிதராகவும், பிறரது சாதனைகளை பாராட்டியும் ஊக்கமும் உற்சாகமும், செய்வதை குழந்தைகளும் பார்த்து மாறுவார்கள்.

தினசரி வேலைகளிலும் நேரம் தவறாமை பின்பற்றுங்கள். மன அழுத்தம், எரிச்சல், கோபம் நீங்கும். உங்கள் குழந்தைகளும் இதனைப் பின்பற்றி எதற்கும் கோபப்படாமல் பின்பற்றுவார்கள்.

எந்த சூழலிலும் உங்களை நம்பி கொடுத்த பொறுப்புகளை செய்து முடியுங்கள். உங்கள் குழந்தைகளும் நம்பிக்கைக்குரியவர்களாக வளர்வார்கள்.

நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதை குழந்தைகள் முன்னிலையில் புலம்பாமல், வேலையை நேசித்து செய்தால், குழந்தைகளும் வளர்ந்தபின் அப்படியே இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
மாயம் செய்யும் முருங்கைக்கீரை நீர்.. இவ்வளவு விஷயம் இருக்கா இதுல?
Motivation image

குடும்பத்துக்காகவும், உறவுகளுக்காகவும், நண்பர்களுக்காகவும் 

செலவிடும் பணத்துக்கும், நேரத்துக்கும் கணக்கு பார்க்காதீர்கள்.

இந்த உண்மைகளை குழந்தைகளும் புரிந்து கொள்வார்கள்.

வெளியிடங்களில் மற்றவர்களை குழந்தைகள் முன் கிண்டல், கேலி செய்து குழந்தைகளுக்கும் பழக்காதீர்கள். அவர்களின் குணம், பண்பை கூறி  புரிய வையுங்கள்.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அதற்கான வாழ்க்கை முறைகளையும், உடற்பயிற்சி, விளையாட்டு, சத்தான உணவு, தூக்கம் என ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.

சாலை விதிகளையும், குப்பைகளை போடுவது, சட்ட விதிகளை மதிப்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் குழந்தைகளும் அப்படியே வளருவார்கள்.

இதனை உணர்ந்து குழந்தைகளுக்கு தெரியவையுங்கள்.

பின்நாளில் அவர்களும் நல்ல விஷயங்களை பின்பற்றுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com