
செயலற்றுக் கிடப்பது
தூக்கம். ஆறுமணி நேர தூக்கம் போதுமானது. தேவைக்கு அதிகமாக தூங்கினால் ஆரோக்கியம் வீணாகிறது. ஒரு மாறுதலுக்காக ஒருமணிநேரம் தாமதமாகபடுக்கப் சென்று, ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்திருக்கலாமே. இதனால் தினமும். 2 மணிநேரம் மிச்சம். மாதத்திற்கு 60 வருடத்திற்கு 720 மணிகள். அடடே உங்களுக்கு மட்டும் வருடத்திற்கு 13 மாதங்கள். பார்த்தீர்களா?.
வெறும் சோம்பல்
உடற் சோம்பல், மனச் சோம்பல் எதுவானாலும் பயனற்றுப் போகிறது. எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றால் முன்னேற்றம் எப்படி வரும்.?
எதிலும் தெளிவில்லை
எந்த லட்சியமும் இல்லை. எண்ணங்களில் தெளிவு இல்லை. செல்லும் பாதையில் குழப்பமாகவே இருந்தால் நேரம் இறக்கை கட்டி பறந்துவிடும்.
காலம் கடத்துவது
நினைத்தோமா, முடித்தோமா என்று இல்லாமல் அவர் வரட்டும், நல்ல நேரம் வரட்டும் மார்கழி போகட்டும். குரு வரட்டும் என்று வரிசையாக காரணங்களைக் கண்டுபிடித்து நாட்களை ஓட்டுபவர்கள் வீணாக்குகிறோம் என்று தெரியாமலேயே தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
ஒத்திப் போடுவது
விளைவுகளைப் பற்றிய பயத்தால், மேலும் யாரை அணுகுவது என்று அறியாமை, இப்போ என்ன அவசரம், என்று இப்படி ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தால் காலம்போன காலத்தில் கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது
தயக்கம்
நல்ல திட்டம் கையில் இருக்கும். இருந்தும் தன் திட்டத்தைப் பற்றிய சந்தேகம் இன்னும் முழுமையாகப் போகாததால் வருடங்களை விழுங்கிக் கொண்டிருப் பவர்கள், வளர்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நிற்கின்ற இடத்திலேயே நிற்க வேண்டியதுதான்.
முடிவெடுத்தல்
முடிவெடுக்காமலேயே காலத்தை ஓட்டுவது. மிகத் தாமதமாக முடிவெடுப்பது, தவறாக முடிவெடுப்பது. இதெல்லாமுமே வாழ்க்கையைத் தொலைப்பதில்தான் கொண்டு போய் விடும். சின்னச் சின்ன விஷயங்களுக் கெல்லாம் முடிவெடுக்கத் தவறினால் நேரம் நின்று கொண்டிருக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பயனற்ற வேலையெல்லாம் தவிர்த்து விடுங்கள். நீங்கள் செய்யாமல் பிறரை வைத்து செய்திருக்கலாமே என்ற வேலைகள் என்னென்ன செய்து வந்தீர்கள் என்று பாருங்கள். அதில் ஒருநாளில் எவ்வளவு நேரம் போயிற்று என்று பாருங்கள்.
நேரத்தை உணர்ந்து செயல்பட்டாலே வெற்றிதான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.