வெற்றியாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் செய்யும் 7 விஷயங்கள் தெரியுமா?

Prioritize physical health
winners...Image credit - pixabay
Published on

சாதாரண மனிதர்கள் ஓய்வு நேரத்தை டி.வி பார்ப்பது, மொபைலில் ரீல்ஸ் பார்ப்பது, ஊர் சுற்றுவது என்று பொழுதைக் கழிப்பார்கள். ஆனால் வெற்றியாளர்களின் ஓய்வு நேர நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. புத்தகம் படிப்பது;

வெற்றி என்பது ஒரு நாளில் கிடைக்கக்கூடிய விஷயம் அல்ல. வாழ்க்கை முழுவதும் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அது சுய முன்னேற்றத்தின் முக்கியமான அம்சம் என வெற்றியாளர்களுக்கு நன்றாக தெரியும். எனவே அவர்கள் ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உலகின் மிக வெற்றிகரமான மனிதரான பில்கேட்ஸ் ஆண்டுக்கு 50 புத்தகங்கள் படிப்பார், அதாவது கிட்டத்தட்ட வாரம் ஒரு புத்தகம். அவரைப் போலவே பிற வெற்றியாளர்களும் புத்தகம் படித்து, தம்  தனிப்பட்ட வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.

2. உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை;

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சுறுசுறுப்பாக உழைக்க முடியும். எனவே வெற்றியாளர்கள் உடற்பயிற்சியின் மதிப்பை உணர்ந்து அதற்காக நேரம் ஒதுக்கி யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை தவறாமல் செய்வார்கள். பல தலை சிறந்த நிர்வாக அதிகாரிகள் உடற்பயிற்சிக்கு பெயர் பெற்றவர்கள். வெற்றியின் ஒரு பகுதியே உடற்பயிற்சி.

3. உறவுகள், நட்புகளுடன் நேரம் செலவிடுவது;

வெற்றியாளர்கள் வலுவான உறவுகளை பேணுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை மதித்து அவர் களுக்காக நேரம் ஒதுக்கி மகிழ்ச்சியாக இருப்பார்கள். செல்வம் மற்றும் புகழைக் காட்டிலும் ஒரு நபருக்கு ஒட்டுமொத்த மகிழ்ச்சி தருவது அவருடைய உறவுகளின் தரம் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது. உறவும் நட்பும் சூழ மகிழ்ச்சியாக இருக்கும் வெற்றியாளர்கள் மேலும் மேலும் வெற்றி பெறுகிறார்கள்.

4. குறைவான திரை நேரம்;

நேரத்தை உறிஞ்சும் மொபைல் ஃபோனில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. ஆனால் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் எனவே மிகக் குறைந்த நேரத்தை மட்டுமே செல்ஃபோனில் செலவிடுகிறார்கள்.

5. திருப்பித் தருதல்;

வெற்றியாளர்கள் தங்களது பணம், நேரம், வளம், அறிவு போன்றவற்றை உறவு, நட்பு மற்றும் சமுதாயத்துக்கு திருப்பித் தருகிறார்கள்‌.  இது நன்றி அறிவித்தலின் செயல்பாடு. பிறரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இன்னும் அவர்கள் முன்னேறுகிறார்கள்.

6. தோல்விக்கான காரணம் குறித்து தீவிரமாக சிந்தித்தல்;

தாங்கள் செய்யும் செயல்களில் தோல்வி அடையும்போது அவர்கள் அதற்காக அஞ்சுவதில்லை. ஒவ்வொரு தோல்வியிலும் பாடம் கற்றுக் கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் வெட்கப்படவோ வேதனைப்படுவதோ இல்லை. தோல்வி என்பது கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று அறிந்திருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் தோல்விக்கான காரணம் குறித்து தீவிரமாக சிந்திக்கிறார்கள்.

7. படைப்பாற்றல்;

பல வெற்றியாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தங்களுக்கு மனதுக்குப் பிடித்த படைப்பாற்றலை வெளிப் படுத்து கிறார்கள். ஓவியம் வரைதல், சமையல், தோட்டக்கலை என அவர்கள் மனம் விரும்பிய ஏதோ ஒரு செயலை செய்கிறார்கள். இதனால் மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் புதிய யோசனைகளும் கிடைக்கப் பெறுகிறார்கள். வெற்றியடைய விரும்புவோர் இந்த ஏழு விதிகளையும் பயன்படுத்தினால் அவர்களுக்கும் வெற்றி உறுதி.

4. குறைவான திரை நேரம்;

நேரத்தை உறிஞ்சும் மொபைல் ஃபோனில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. ஆனால் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் எனவே மிகக் குறைந்த நேரத்தை மட்டுமே செல்ஃபோனில் செலவிடுகிறார்கள்.

5. திருப்பித் தருதல்;

வெற்றியாளர்கள் தங்களது பணம், நேரம், வளம், அறிவு போன்றவற்றை உறவு, நட்பு மற்றும் சமுதாயத்துக்கு திருப்பித் தருகிறார்கள்‌.  இது நன்றி அறிவித்தலின் செயல்பாடு. பிறரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இன்னும் அவர்கள் முன்னேறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நம் வாழ்வில் தவறான நபர்களிடமிருந்து தள்ளியிருப்பதே சிறந்தது!
Prioritize physical health

6. தோல்விக்கான காரணம் குறித்து தீவிரமாக சிந்தித்தல்;

தாங்கள் செய்யும் செயல்களில் தோல்வி அடையும்போது அவர்கள் அதற்காக அஞ்சுவதில்லை. ஒவ்வொரு தோல்வியிலும் பாடம் கற்றுக் கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் வெட்கப்படவோ வேதனைப்படுவதோ இல்லை. தோல்வி என்பது கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று அறிந்திருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் தோல்விக்கான காரணம் குறித்து தீவிரமாக சிந்திக்கிறார்கள்.

7. படைப்பாற்றல்;

பல வெற்றியாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் தங்களுக்கு மனதுக்குப் பிடித்த படைப்பாற்றலை வெளிப்படுத்து கிறார்கள். ஓவியம் வரைதல், சமையல், தோட்டக்கலை என அவர்கள் மனம் விரும்பிய ஏதோ ஒரு செயலை செய்கிறார்கள். இதனால் மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் புதிய யோசனைகளும் கிடைக்கப் பெறுகிறார்கள். வெற்றியடைய விரும்புவோர் இந்த ஏழு விதிகளையும் பயன்படுத்தினால் அவர்களுக்கும் வெற்றி உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com