தன்னம்பிக்கையாளர்கள் கடைபிடிக்கும் 9 முக்கியமான விஷயங்கள் எவை தெரியுமா?

motivation Image
motivation ImageImage credit - pixabay.xom

ன்னம்பிக்கை உடையவர்கள் எப்போதுமே பலர் கூடியுள்ள இடத்தில் கூட தனித்துத் தெரிவார்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் ஒன்பது முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்

தன்னம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சி என்பது நம்பிக்கையின் ஒரு முக்கிய அம்சம் என்று நம்புகிறார்கள்.  மற்றவர்கள் தங்கள் சாதனைகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் சொந்த சாதனைகளில் இருந்து மகிழ்ச்சி மற்றும் திருப்தி உணர்வைப் பெறுகிறார்கள்.

2. யாரையும் எடை போடுவதில்லை

தன்னம்பிக்கையாளர்கள் ஒருபோதும் பிறரை குறைத்து மதிப்பட மாட்டார்கள். தாங்கள் சந்திக்கும் மனிதர்களைப் பற்றி அவர்கள் எடை போட்டுக் கொண்டிருப்பதில்லை.

3. பேசுவதை விட அதிகமாக கேட்கிறார்கள்

தன்னம்பிக்கை உள்ளவர்கள்தான் பேசுவதை விட பிறர் பேசுவதை அதிகமாக கேட்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். அதனால் தாங்கள் வளர்கிறார்கள்.

4. உறுதிப்பட பேசுகிறார்கள்

எனக்குத் தெரியாது. என்னால் முடியாது என்று அவர்கள் பேசுவதில்லை மாறாக நான் தெரிந்து கொள்வேன். இதை முயற்சி செய்து முடிப்பேன் என்று சொல்வார்கள். அவர்கள் மனதில் இருக்கும் தன்னம்பிக்கை, உறுதியான வார்த்தைகளாக வெளிப்படுகிறது.

5. உடற்பயிற்சி செய்தல்

தங்களது உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தைப் பற்றிய அக்கறை, இவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் தங்களது சுயமரியாதை உயரும் என அதன்படி செயல்படுகிறார்கள். உடற்பயிற்சி செய்யும்போது என்டார்ஃபின் உருவாகி அது அவர்களை நேர்மறை எண்ணத்தோடு வைக்கிறது.

6. தவறு செய்தால் பயப்படுவதில்லை

தாங்கள் செய்யும் முயற்சிகளில் தவறுகள் ஏற்பட்டால் அதற்காக அவர்கள் பயப்படுவதில்லை. அதிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சம்மருக்கு சுவையான சிம்பிள் மில்க் ரெசிபிஸ் இதோ...
motivation Image

7. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்

நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் அதை தட்டிக் கழிப்பதில்லை. தைரியமாக அதை பயன்படுத்தி தங்களை நிரூபிக்கிறார்கள். முன்னேறுகிறார்கள்

8. உதவி கேட்க தயங்குவதில்லை

பிறரிடம் உதவி கேட்பதை பலவீனமாகவோ அல்லது அறியாமை என்று அவர்கள் நினைப்பதில்லை தங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்திருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு பிறரிடம் ஏதாவது உதவி தேவை என்றால் அதை கேட்டு பெறுகிறார்கள். நிபுணத்துவம் கொண்டவரிடம் இருந்து கற்றுக் கொண்டு தங்களை மேன்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

9. பிறரை கொண்டாடுகிறார்கள்

பொதுவாக தன்னம்பிக்கை இல்லாத மனிதர் பிறருடைய கவனத்தைக் கவர தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபடுவார். ஆனால் தன்னம்பிக்கையாளர்கள் மற்றவர்களை உற்று கவனிக்கிறார்கள். அவர்கள் செய்யும் அற்புதமான விஷயங்களை பாராட்டுகிறார்கள். அவர்களை கொண்டாடுகிறார்கள் இதனால் தங்களையும் அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com