உண்டிகோல் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் தெரியுமா?

Do you know the life philosophy of Undigol?
Do you know the life philosophy of Undigol?https://ta.quora.com
Published on

நாம் அனைவரும் சிறு வயதில் வைத்து விளையாடிய உண்டிகோலை நினைவிருக்கிறதா? மாங்காய் அடிக்க அதிகமாகப் பயன்படுத்தியிருப்போம். சரியாகக் குறிப்பார்க்க வேண்டும், சரியான ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும், சரியான நேரம் பார்த்து இலக்கை அடித்தாலே நமக்கும் சரியான பலன் கிடைக்கும்.

இந்த உண்டிகோலை வைத்து விளையாடும்போது, எவ்வளவுக்கு எவ்வளவு பின்பக்கமாக இழுக்கிறோமோ அவ்வளவு முன்னே செல்லும் ஆற்றல் உடையது. நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமையவில்லை, எதுவுமே சரியாக நினைத்தது போல நடக்கவில்லை என்று தோன்றும்போது, இந்த உண்டிகோலை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் பின்நோக்கி செல்வது என்பது முன்னோக்கி செல்வதற்காகவே என்னும் தத்துவத்தை உணர வேண்டும்.

நம் வாழ்க்கையில் மோசமான நாளை சந்தித்திருந்தால், நிச்சயமாக சந்தோஷமான, மகிழ்ச்சியான நாளையும் கண்டிப்பாக சந்திப்போம். நம் வாழ்க்கையில் மோசமான 10 நாட்கள் இருக்குமானால், அடுத்து வரும் 20 நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறது என்று அர்த்தம். நீங்கள் தொடர்ந்து 30 நாட்கள் கஷ்டத்தை சந்திக்கிறீர்கள் என்றால், அடுத்து வரும் 60 நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
Armored catfish: பாலைவனத்திலும் வாழும் அபூர்வ மீன்!
Do you know the life philosophy of Undigol?

எனக்குப் பிடித்தவர்கள் என்னை கஷ்டப்படுத்துகிறார்கள், வேலை சரியாக அமையவில்லை, வாழ்க்கையில் எந்தக் காரியமுமே நடக்கவில்லை என்பது போன்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எவ்வளவுக்கு எவ்வளவு வாழ்க்கையில் பின்னோக்கி போகிறோமோ அவ்வளவு முன்னோக்கி செல்லப் போகிறோம் என்று அர்த்தம்.

நீங்கள் வாழ்க்கையில் முன்னாடி செல்வதை, வளர்வதை, வெற்றியடைவதை எவ்வாறு ரசிக்கிறீர்களோ? அதேபோல வாழ்க்கையில் பின்னோக்கி செல்லும் காலங்களையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதை நினைத்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், பின்னோக்கிச் சென்றால் கண்டிப்பாக முன்னோக்கி செல்லத்தான் போகிறோம் என்ற உண்டிவில்லின் தத்துவத்தை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

வாழ்க்கை என்பது எப்போதுமே ஏற்றத்தாழ்வு கொண்டதுதான். நாம் குதிக்க முயற்சிக்கும்போது கூட பின்னோக்கி சற்று நம்மை தாழ்த்தி அழுத்தம் கொடுக்கும் போதுதான் அதிக உயரத்திற்கு எழும்ப முடியும். எனவே, கஷ்டங்களை நினைத்து வருந்தாமல், அதை வெறுக்காமல் அதையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், வலியே நம்மை வலிமையாக்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com