உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றும் ரகசியம் தெரியுமா?

Lifestyle articles
The life-changing secret
Published on

ண்ணுக்கு அழகான தோற்றம், கச்சிதமான உடைகளும் மட்டுமே ஒருவனை மரியாதைக்குரியவனாக ஆக்கிவிடாது.  குண இயல்புகளை  வெளிகாட்டும் நடத்தையே முக்கியத்துவம் பெற்றது.

ஒருவருடைய பர்சனாலிடியை தீர்மானிக்க அவருடைய நற்பண்புகளை போலவே தீயபண்புகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அலுவலகத்தில் திறமையான அதிகாரிக்கு சுறுசுறுப்பு சிக்கல்களுக்கும் தீர்வுகாணும் சாதுர்யம் இருந்து அவருக்கு கையூட்டு வாங்கும் பழக்கம் இருந்தால் பர்சனாலிடியை மங்கச் செய்து விடுகிறது.

தவறுகள் மனித இயற்கை என்பார்கள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது தவறு, குறைபாடு, பலவீனம்  எல்லா மனிதர்களிடத்திலும். இருக்கவே செய்யும்.

ஆனாலும் பர்சனாலிடியை பராமரிக்க நினைப்பவர் அதற்கு பழுது ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல நடத்தை உள்ளவர்கள் எதிராளியின் மனத்தை தன் வயப்படுத்துவார். நல்ல நடத்தை உள்ளவர்கள் அதிக அளவு எதிர்ப்புகளை சந்திக்கும் நிலை இராது.

நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரேமாதிரி நடந்து கொள்ள முடியாது. எங்கே கடுமை காட்டவேண்டும், எங்கே நளினமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை புரிந்து வைத்திருப்பது நல்லது. வாழ்க்கையை சரிவர அனுமானிக்கிறவனுக்கே அதற்கான பக்குவம் வரும். குணநலனைப் பொறுத்தவரைதான் ஒருவருடைய பர்சனாலிட்டி  ஒளி வீசுகிறது அல்லது மங்கிப் போகிறது. 

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்வில் 90% வெற்றி போதாது! 100% வெற்றிபெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Lifestyle articles

போதிய அக்கறை இல்லாதவனும், மந்தகதியானவனும் சில நேரங்களில் தங்கள் நேர்மையை பராமரிக்க முடியாது.  மனவலிமையை இழந்து விடுவதே அதற்குக் காரணம். விரும்பத்தக்க நடத்தை உள்ளவன் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கிறான். ஆதிக்க குணமும், முரட்டுத்தனமும், பிடிவாதமும் உள்ளவன்  சமூகத்தில் நல்ல நிலையை அடைய முடிவதில்லை.

காரணம் சமூகம் அவனை விலக்கி வைத்து விடுகிறது. நீங்கள் நேர்மையாக இருங்கள்.  மனிதத்தன்மையுடன், சமுதாயப் ப்ரக்ஞையுடன் செயல் புரியுங்கள். பண்புகளில் தலையாயது மனித நேயம்.  உங்களுடைய நற்பண்புகள் சமுதாயத்தில்  உரிய இடத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும் வாழ்க்கை பாராட்டுக்குரியதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com