லட்சியத்தின் வெற்றிப்படிகள் எது தெரியுமா?

Achievements of Ambition
Stay focused on your goals...image credit - pixabay
Published on

நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் முதலில் லட்சியத்தில் உறுதியாக இருக்கவேண்டும். ஒரு லட்சியமும் இல்லாமல் வெற்றி பெறவேண்டும் என்றால் அது நிச்சயம் நடக்காத காரியம். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் பாருங்களேன் மனஉறுதியும் இலட்சியமும் கண்டிப்பாக இருக்கும்.

பொதுவாகவே வாழ்க்கையில் இலட்சியம் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் கடைபிடித்தால் வெற்றி நம் பின்னால் பயணிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. லட்சியம் இல்லாத எந்த காரியம் செய்தாலும் சரி அது முழுமை பெறாது நிச்சயம் வெற்றியும் பெறாது என்பது உறுதி.

வெற்றிப் படிக்கட்டுகளை நாம் தொடவேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது லட்சியம் லட்சியம் இல்லை என்றால் நிச்சயமாக வெற்றி படிக்கட்டை தொட முடியாது.

வெற்றி என்பது நமக்கு வரும் வாய்ப்புகளை பற்றிய விஷயமல்ல. நமது தேர்வுகள் பற்றிய விஷயம். அது காத்திருக்க வேண்டிய விஷயமல்ல. செய்து சாதிக்க வேண்டிய விஷயம்.

இதையும் படியுங்கள்:
குறிக்கோள் முயற்சிக்கு ஊன்றுகோல்!
Achievements of Ambition

லட்சியம் என்பது எதிர்காலம் பற்றிய நமது பார்வை. அது நாம் தினந்தோறும் மேற்கொள்ளும் தேர்வுகளின் அடையாளம். என்ன சாதிக்க விரும்புகிறோம், எப்படி தோற்றமளிக்க விரும்புகிறோம், எப்படி வாழ விரும்புகிறோம் என்பதை தீர்மானிப்பது நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தையும், நோக்கத்தையும் வழங்குவது.

நாம் விரும்பும் விளைவுகளை நோக்கி முன்னேற, தம்மை பற்றியும், மற்றவர்களை பற்றியும் நேர்மறையான ஆற்றல் மிக்க நம்பிக்கைகள் இருக்க வேண்டும். முன்னேறி செல்வதற்கு தெளிவான திட்டவட்டமான இலக்குகள் இருக்க வேண்டும். மேலும் இலக்குகளை நோக்கி திட்டமிட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

ஓர் லட்சியத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் 'செயலுக்கு புறப்படு' என்பதுதான். நாம் எதிர்பார்க்கிற வெற்றிகள் நமக்கு கிடைக்காவிட்டால், நாம் என்ன செய்கிறோம் என்பதை கூர்ந்து கவனித்து அதை மாற்றியமைத்துக் கொண்டால் வெற்றி நம்மை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. ஆமாம் பெரிய அடிகள் எடுத்து வைப்பதில் அச்சம் கொள்ளாதீர்கள். ஒரு பெரிய கிணற்றை இரண்டு சிறு அடிகளால் தாண்டிவிட முடியாது.

லட்சியங்கள் உன்னதமானதாகவும், சாத்தியமான தாகவும், சவால்விடக் கூடியதாகவும் இருக்கட்டும். அதை நீங்கள் அடையும் போது உங்களை பெருமைபடுத்தட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com