வெற்றியைத் தருவதில் பணத்தின் மதிப்பு தெரியுமா?

Do you know the value of money in bringing success?
motivational articles
Published on

"துன்பம் செழுமையால் வரவில்லை. பணம் அவர்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக அவர்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம். பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இந்த உலகில் அற்புதமான பணிகள் பலவற்றைச் செய்ய முடியும்"- சத்குரு ஜக்கி வாசுதேவ்.

பணம் பற்றிய சில பழமொழிகள் உண்டு 'பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே', 'பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்', 'பணம் பத்தும் செய்யும்', 'பணம் இருப்பவருக்கு மனம் இல்லை மனம் இருப்பவருக்கு பணம் இல்லை' போன்ற பழமொழிகள் பணத்தின் வலிமையைக் காட்டுகிறது.

வாழ்க்கைக்கு பணம் என்பது அத்தியாவசிய தேவைகளில் முதன்மையானது. பணம் இருந்தால் மட்டுமே இந்த சமூகத்தில் ஒரு மனிதன் மதிக்கப்படுகிறான். வெற்றியின் அளவீடும் இந்த பணத்தை வைத்தே  நிர்ணயிக்கப்படுகிறது.   

பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருப்பவர் பொருளாதாரத்தில் வேண்டுமானால் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் அவர் சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். நிலைத்த வெற்றிக்கும் அந்தப் பணம் உதவாது. ஜக்கி கூறுவதும் அதையே.. 


சமீபத்தில் செய்திக்குறிப்பு ஒன்றில் படித்ததை இங்கு காண்போம்.
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு எனும்  இளம் நடிகை பற்றிய தகவல்தான் இது. தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.  நடிகை என்றாலும் இவர் சினிமாவைத்தாண்டி சமூக சேவைகளிலும்  ஈடுபட்டு வருவது சிறப்பு. ஏற்கனவே அரசு பள்ளிகளை தத்து எடுத்து மாணவ மாணவிகளுக்கு உதவிகளை செய்து வரும் இவர் தற்போது தெலுங்கானா மாநிலம் ஜோகு லம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறார்.

இது குறித்து அவர்  "நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்து எடுத்துள்ளேன். இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்து எடுத்து இருக்கிறேன். மொத்தம் 50 பள்ளிகளை தட்டெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே தத்தெடுத்து உள்ளேன். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது எனது விருப்பம் கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு அதை செய்தோம். எத்தனையோ பேர் படித்து நல்ல நிலைமையில் இருப்பார்கள் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் ஊரையே மாற்றி விடலாம்"  என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது?
Do you know the value of money in bringing success?

அதிக வருமானம் வரும் துறைகள் என்று பார்த்தால் அது அதில் சினிமா துறையும் ஒன்று. ஆனால் அதில் நடிக்கும் அனைவரும் மக்களின் கவனத்திற்கு வருகிறார்கள் என்றால் இல்லை . ஆனால்  மொழி தாண்டி ஒரு தெலுங்கு நடிகரின் மகள்  மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதுடன் முன்னுதாரணமாக அதை தானும் பின்பற்றுகிறார் என்றால் இந்த இடத்தில் பணம் என்பதையும் தாண்டி அவரின் சமூக நேயத்தை அறிகிறோம்.

இவர்போல்  மற்ற இளைஞர்களும் இளைஞிகளும் நல்ல கல்வி கற்று தங்கள் துறையில்  பொருளாதாரம் ஈட்டுவதுடன் அதை சமூகம் பயனுறும் வகையில்  சிந்தித்து செயலாற்றினால் அவர்களும் ஒருநாள் வெற்றிகரமான மனிதர்களின் வரிசையில் இடம் பெறுவார்கள். அவர்கள் ஈட்டிய பணத்தின் மதிப்பும் உயரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com