உயர் மதிப்புள்ள பெண்ணாகத் திகழ தேவைப்படும் 12 குணங்கள் எவை தெரியுமா?

Motivation Image
Motivation ImageImage credit -pixabay.com

1. தன்னம்பிக்கை 

ஒரு பெண் தன்னையும் தன்னுடைய திறமைகளையும் நம்ப வேண்டும். அப்போதுதான் பிறரும் அவரையும் திறமைகளையும் மதிப்பார்கள். 

2 சுய அன்பு 

பெண்கள் தன்னுடைய குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் நேசிக்கும் அளவு தன்னையும் கட்டாயம் நேசிக்க வேண்டும். தன் மீது மிகுந்த இரக்கம் கருணை செலுத்தி மரியாதையுடன் நடத்த வேண்டும். அப்போதுதான் நேர்மறையான நபர்களையும் அனுபவங்களையும் தங்கள் வாழ்க்கையில் ஈர்க்கும் சக்தி பெற்றவர்களாக இருப்பார்கள். 

3. எல்லைகளை அமைத்தல்;

பிறர் மீது தனக்கான எல்லைகளை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், தன்னுடைய எல்லைகளையும் அமைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தன்னை மதிக்காத, ஒத்துப்போகாத, அசௌகரியத்தை ஏற்படுத்தும் நபர்களையும் விஷயங்களையும்  வேண்டாம் என்று தைரியமாக கூற வேண்டும்.

4. சுதந்திரமாக செயல்படுவது;

சுதந்திரமாக இருப்பது என்றால் தன் சொந்த காலில் நிற்பது மேலும் தன்னுடைய மகிழ்ச்சியும் நிம்மதியும் மற்றவர்களை சார்ந்து இருக்காமல், தானே அதை உருவாக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது தன்னிறைவையும் மன வலிமையையும் உண்டாக்கும் 

5. நேர்மறை எண்ணம் 

ஒரு பெண்ணுக்கு நேர்மறை எண்ணம் மிகவும் அவசியம். தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் இல்லை அல்லது தன்னுடைய தோற்றத்தில் என்னவெல்லாம் மைனஸ் பாயிண்ட்களாக இருக்கின்றன என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தனக்கு கிடைத்துள்ள நல்ல விஷயங்களுக்காகவும் தன்னுடைய தோற்றத்திலும் திறமையிலும் இருக்கும் ப்ளஸ் பாயிண்ட்டுகளில் கவனம் செலுத்தி, அவற்றிற்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்.

6. உண்மைத்தன்மை 

ஒரு பெண் தனக்குத்தானே உண்மையாக இருப்பது மிகவும் முக்கியம். பிறரை மகிழ்விக்க ஒருபோதும் முயலக் கூடாது. தனித்துவத்தை தழுவி உண்மையான  சுயத்தில் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். தன்னுடைய சுயமான குணத்தை பிரகாசிக்க செய்ய வேண்டும் 

7. சுய அக்கறை;

பெண்கள் தங்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நன்றாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம் சத்தான உணவுகளை உண்டு உடற்பயிற்சி செய்து, போதுமான ஓய்வு கொடுத்து தங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

8. இலக்கு அமைத்தல்; 

தனக்கான இலக்குகளை நிர்ணயத்து அவற்றை நோக்கி செயல்படுவது பெண்களுக்கு ஒரு நோக்கத்தையும் லட்சியத்தையும் அளிக்கிறது. அந்த இலக்குகள் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும் அவற்றை அடைவது மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். அவை அவர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் அதிகரிக்கிறது .

இதையும் படியுங்கள்:
கண்ணாடி பாலத்தில் நடக்கும் த்ரில் அனுபவம் வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லலாமே!
Motivation Image

9. தகவல் தொடர்பு திறன் 

வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் பயனுள்ள தகவல் தொடர்பு இன்றியமையாதது எனவே பெண்கள் தங்களை தெளிவாக, உறுதியுடன் எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தி, கருத்துக்களை தயக்கமோ அச்சமோ இன்றி சொல்ல வேண்டும். பிறரின்  உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்தால் உறவுகளை வலுப்படுத்தவும்  மோதல்களை தவிர்க்கவும் உதவும்.

10. பின்னடைவு 

வாழ்க்கையில் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் ஏற்படலாம். தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டு துன்பங்களை உறுதியான மனதுடன் எதிர்கொள்வது உயர் மதிப்புள்ள  பெண்களின் குணமாகும்.

11. பச்சாதாபம் மற்றும் இரக்கம் 

பிறரிடம் பச்சாதாபம் மற்றும் இரக்கம் காட்டுவது ஆழமான புரிதல் உள்ள தொடர்புகளை வளர்க்கிறது. உறவுகளை வளப்படுத்துகிறது. சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்வதும் ஆதரிப்பதும் இரு தரப்பினருக்கும் மன நிறைவை ஏற்படுத்தும் 

12. தொடர்ச்சியான வளர்ச்சி; 

ஒரு போதும் கற்றலையும் வளர்வதையும் நிறுத்தக்கூடாது. புதிய அனுபவங்களை தேடுவது, புதிய திறன்களை பெறுவது, அறிவை விரிவுபடுத்துவதன் மூலம் பெண்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்துறையில் முன்னேற்றமும் வளர்ச்சியும் காணலாம். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளையும் அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com