
சிறந்த தலைவர்கள் எப்போதும் புதிய யோசனைகளை ஏற்கும் பண்பு உள்ளவர்கள். அவர்கள் பல்வேறு கோணங்களில் வரவேற்பார்கள். இவர்களால் புதுமை கண்டுபிடிப்புகள் அதிகமாகும்.
தங்கள் பணி மீது மிகுந்த ஈடுபாடு வைப்பர். அவர்கள் குழுவை நன்கு ஊக்குவிப்பார்கள். இதனால் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பாக பணியாற்ற விருப்பம் ஏற்படும்.
அடுத்தவர்களுக்குப். பிடித்தமானவர்களாக இருக்க நினைக்க மாட்டாரா கள். அவர்கள் கடுமையான முடிவுகளை எளிதாக எடுப்பார்கள். தங்கள் புகழவிட நிறுவன வளர்ச்சியை மனதில் வைத்து செயல் படுவார்கள். இதனால் அவர்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும்.
நல்ல தலைவர்கள் உதாரணமாக விளங்குவார்கள். பணியில் அர்ப்பணிப்போடு இருப்பார்கள். மற்றவர் களையும் அப்படிச்செய்ய ஊன்று கோலாக இருப்பார்கள்.
நல்ல தலைவர்கள் எப்போதும் குழுவின் வெற்றிக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். குழுவில் நன்றாகச் செயல் படுபவரைப் பாராட்டி ஊக்குவிப்பார்கள். மற்றவர்களை முன்னிருத்தி ஒற்றுமையான சூழலை ஏற்படுத்துவார்கள்.
நல்ல தலைவர்கள் தவறுகளுக்கும் பொறுப்பேற்று சரி செய்ய முனைவார்கள். இது அவர்களின் நேர்மை மற்றும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது.அவர்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வார்கள்.
நல்ல தலைவர்கள் நல்ல ஃபீட் பேக்குகளை தருவார்கள். இந்த பண்பினால் குழுவின் நம்பிக்கை ஊக்ககுவிக்கப்பட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
தனது ஊழியரின் வெற்றிக்குப் தேவையான உதவிகளை வழங்குவார். பணியாளர்கள் நல்ல சூழ்நிலையில் வேலை பார்க்க உதவுவார்கள். இதனால் ஊழியர்களிடம் நம்பிக்கையையும் , விசுவாசத்தையும் ஏற்படுத்துவார்கள்.
ஒரு நல்ல தலைவர் தன் குழுவினருக்கு உற்சாகம் தரும் வகையில் ஊக்குவித்து அவர்களை பணியில் சிறக்கச் செய்வார்கள். இவருடைய இந்த அணுகுமுறை குழுவை எப்போதும் உற்சாகத்துடன் வைக்கும்.
ஒரு தலைவர் குழுவில் உள்ள அனைவரிடமும் தனிப்பட்ட பிணைப்பில் இருப்பர். அவர்களின் பலங்கள் பலவீனங்கள் பற்றி நன்கு அறிந்திருப்பர். இதனால் குழுவில் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்பட்டு குழு மகிழ்ச்சியாக பணிபுரியும் சூழல் ஏற்படும்.