நம் வாழ்க்கையை தீர்மானிப்பது எது தெரியுமா?

Do you know what determines our life?
good thoughts...Image credit - pixabay
Published on

ண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லைை. நம் எண்ணங்கள்தான் முடிவு செய்கின்றன. அதனால்தான் பெரியவர்கள் நம்மை வாழ்த்தும்போது எண்ணம்போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். எண்ணத்தில் புதுமையும், உள்ளத்தில் தெளிவும் இருந்தால் வாழ்வில் என்றும் சிறக்கலாம். நேர்மையான எண்ணங்கள் வெற்றியின் இலக்கை எளிதில் அடையும்.

நம் எண்ணங்கள் எப்போதுமே உயர்ந்ததாக இருக்கவேண்டும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் நாம் வாழும் வாழ்க்கையின் மதிப்பு புரியும். வாழ்க்கையை அமைப்பது எண்ணங்களே. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை கட்டமைப்பதும் அவர்களுடைய எண்ணங்கள்தான்.

எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரது வெற்றி தோல்வி அமைகிறது. நல்ல எண்ணங்களைக் கொண்டு சிந்திப்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். ஏனெனில் ஒருவர் யாராக வேண்டும் என்பதை நம் சிந்தனையே தீர்மானிக்கின்றது.

சிந்தனைக்கு யாராலும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. ஆனால் நம் பகுத்தறிவு கொண்டு அதை நாமே கட்டுக்குள் வைக்கமுடியும். எப்பொழுதும் நம் எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாழ்வில் நல்லது நடைபெற வேண்டுமானால் நல்லதையே எண்ணுவோம். நாம் இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம். நம் எண்ண அலைகளுக்கு பலம் உண்டு. எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அது தொடர்பான நிகழ்வுகள் நடைபெறும். நம் எண்ண அலைகளுக்கு ஏற்ப சம்பவங்களும் தொடர்ந்து கொண்டு இருப்பதால் எண்ணம்போல் வாழ்க்கை என்று  கூறுகிறார்கள்.

நம் எண்ண அலைகள் எதிரில் உள்ளவரின் மனநிலையைக் கூட மாற்றும் திறன் கொண்டது. எதிர்மறையான எண்ணங்கள் கொண்டால் தவறாகவும், நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தால் வாழ்வில் அனைத்தும் சரியாகவும் நடக்கும். யாரையுமே எதிரியாக நினைக்காமல் நட்பாக, அன்பாகப் பழகும்போது அவர்கள் அன்பாக நடந்து கொள்கிறார்களோ இல்லையோ பிரச்னை தராமலாவது இருப்பார்கள். இது நம் நல்ல எண்ணத்திற்கான பரிசாகும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், நல்லதையே அடையலாம். 

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கை - விடாமுயற்சி சேரும்போது வெற்றி நிச்சயம்!
Do you know what determines our life?

எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்னைகளைத்தான் காண்பார்கள். தேவையற்ற எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பழகவேண்டும். எப்பொழுது எதை சிந்திக்க வேண்டுமோ அப்போது மட்டும் அதை சிந்தித்தால் போதும். அதிகப்படியான எண்ணங்களை அனுமதித்தால் மனதில் குழப்பம்தான் உண்டாகும். நம் மனம் உறுதி பெறவும், எண்ணங்கள் வலுவடையவும் எதிர்ப்பும், பகையும் கூட அவசியமானவைதான். நாம் செய்யும் செயலுக்கு எதிர்ப்பு இருப்பின் அதனை செய்தே தீரவேண்டும் என்று நம் மனம் உறுதி கொள்வதுடன் எண்ணங்களும் உறுதிபெறும்.

நம் எண்ணங்கள் அனைத்து நேரங்களிலும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில சமயம் தோல்வியும் வரும். அப்போது நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை கை நீட்டி குற்றம் சாட்டும் பொழுது இது நம்மால் எடுக்கப்பட்ட முடிவு, நாம்தான் இதனை சரி செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். இதற்கு  முழு பொறுப்பு ஏற்று, எங்கு தவறு செய்தோம் என்று கண்டறிந்து அதை சரி செய்வதே நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.

இப்போது புரிந்ததா நம் வாழ்க்கையை தீர்மானிப்பது எது என்று? வாழ்த்துக்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com