
நீங்கள் எந்த விதமான சூழ்நிலையையும் மேற்கொள்ள முடிந்தால் அது ஒரு ஆரோக்கியமான குணமாகும். இதை சாத்தியமாக்க வழிகள்.
நீங்கள் உங்களுக்கு அழுத்தம் தரக்கூடிய விஷயங்களைப் பற்றி எழுதிவைத்து அதை அடையாளப் படுத்திக் கொண்டு அவற்றைக் களையப்பாருங்கள். குறிப்பாக கோவிட் சமயத்தில் பலர் இதைச் செய்து தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டிருப் பார்கள்.
நீங்கள் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமல்ல. அது ஒரு எனர்ஜி பூட்ஸ்ட்ராகச் செயல்படுகிறது. அது மனஅழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசாலைக் குறைத்து மகிழ்ச்சியை அளிக்கும் எண்டாரஃபினை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உணர்வுகளை நன்கு ஆளக்கூடிய சக்தியும் ஏற்படும்.
மனதில் ஒரு பூரணத்துதவத்தை ஏற்படுத்துங்கள். இதனால் மனம் அமைதி அடைவதோடு எந்தப் பிரச்னையையும் பதட்டம் படாமல் அணுகும் குணத்தைக் தரும்.
நீங்கள் எப்போதும் சகமனிதர்களுடன் நல்ல உறவில் இருப்பது உங்களுக்குக் கஷ்டமான நேரங்களில் ஏற்படும் மனஅழுத்தம் குறையும். உறவினர்கள் மற்றும் நண்பர் களோடு இணக்கமாக இருப்பதால் மனப் பதட்டம், மன அழுத்தம் ஏற்படாது. அதிக நேரத்தை அவர்களோடு செலவிடப் பாருங்கள்.
பலர் இரவு வெகுநேரம் கண்விழித்து வேலை பார்ப்பர். தூக்கத்தை தியாகம் செய்து விடுவார்கள். தூக்கம் என்பது உடலுக்கு நல்லது மட்டுமல்ல, நல்ல அமைதியான மனநிலை ஏற்பட நல்ல தூக்கம் மிக அவசியமாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேர தூக்கம் மிக அவசியமானது.
மூச்சை நீண்ட நேரம் இழுத்துவிடும் பயிற்சி மூலம் நீங்கள் புத்துணர்வு அடைவதோடு உங்களுக்கு ஏற்படும் பதட்டம், கவலைகளை அகற்றி மனதையும் அமைதியான நிலையில் வைக்கும். மேலும் இந்த பயிற்சி மூலம் உலகில் எந்த பிரச்னையையும் சுலபமாக எதிர்கொள்ளலாம். தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி உங்களை மேன்மைப்படுத்தும்.
அதிக அளவு மின்னணு சாதனங்களின் உபயோகித்து உங்கள் சக்தியை முழுவதுமாக விரயமாக்குவதை முதலில் தடுக்கவும். அதிலிருந்து சிலமணி நேரங்கள் விலகி இருப்பதால் நீங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த முடியும்.
நீங்கள் கஷ்டத்திலோ அல்லது வருத்தமான சூழலிலோ இருக்க நேரிட்டால் உதவி கேட்கத் தயங்காதீர்கள். பலர் அப்படிக் கேட்பது பலவீனம் என்று எண்ணுகிறார்கள். அது அப்படி அல்ல. அதுதான் உங்களுக்கு நன்மையும் பலமும் தரக்கூடியது.