பில்கேட்ஸின் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா?

Bill Gates
Bill Gates
Published on

பல வெற்றியாளர்களை கண்ட இந்த உலகம், வெற்றிக்காக போராடிய அவர்களின் உழைப்பையும் கண்டுள்ளது. வெற்றி யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. படிகட்டுகளாக பல தோல்விகள் கைகொடுத்தன் விளைவாகத் தான் பலருக்கும் இங்கு வெற்றி சாத்தியமானது. அவ்வகையில் உலகின் டாப் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் பில்கேட்ஸின் வெற்றி ரகசியம் என்ன என்பதை இப்போது காண்போம்.

உலகின் டாப் பணக்காரரான பில்கேட்ஸ் கூட தனது ஆரம்பகட்ட வாழ்வில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் தான். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு நிறுவனராக இருக்கிறார். கணினியில் நல்ல அறிவுத்திறன் பெற்றிருந்த பில்கேட்ஸ், தனது 13வது வயதிலேயே புரோகிராம் எழுதும் வல்லமையைப் பெற்றிருந்தார். கணினித் துறையில் இவரை விட ஸ்மார்ட்டாக வருமானம் ஈட்டியவர்கள் யாருமில்லை என்றே சொல்லலாம்.

இவரது கணினி அறிவைக் கண்ட பள்ளி நிர்வாகம், பல்வேறு சலுகைகளை வழங்கி கணினி பயிற்சியில் ஈடுபடுத்தியது‌.‌ அதன் பிறகு, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை முடித்து விட்டு, தனது நண்பர் ஒருவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இன்றைய மென்பொருள் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு அபரிமிதமானது. இந்நிறுவனத்தின் எம்எஸ் விண்டோஸ் உலகளவில் நற்பெயரை ஈட்டியதோடு, நல்ல வருமானத்தையும் அடைய உதவியது. தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிடாத பில்கேட்ஸ் இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் உச்சத்தில் இருக்கிறார்.

பொதுநலத் தொண்டிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பில்கேட்ஸ், தனது மனைவியுடன் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் என்ற பொதுநலத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்நிறுவனம் உதவி வருகிறது. இதுதவிர சில பொதுநல உதவிகளையும் செய்து வருகிறார்.

பங்குச்சந்தை முதலீடுகளில் மட்டுமே கோடிக்கணக்கில் இலாபத்தை ஈட்டியவர் வாரன் பஃபெட். பங்குச்சந்தையில் இவரது கணக்கீடு என்றும் தவறியதே இல்லையாம். அதனால் தான் இவரை பங்குச்சந்தை குரு என்றும் அழைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
கடின உழைப்பா? புத்திசாலித்தனமா? வெற்றி தருவது எது?
Bill Gates

பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகிய இருவரும் இணைந்து பல சேவைகளை தற்போது செய்து வருகின்றனர். ஒருமுறை இருவரும் முதன்முறையாக நேரில் சந்தித்த தருணத்தில், உங்கள் தொடர் வெற்றிக்கான காரணம் எது என இருவரிடமும் தனித்தனியாக கேட்கப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் ஒரே பதிலைத் தான் சொல்லி இருக்கிறார்கள். “எனது இலக்கு எது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். இதுதான் என்னுடைய தொடர் வெற்றிக்கு காரணம்" என இருவருமே தெரிவித்தனர்.

நமது இலக்கில் தீர்மானமாக இருந்து, அதற்காக நாம் உழைக்கும் போது நிச்சயமாக வெற்றியைப் பெறலாம். வெற்றியாளர்களின் பலரது வெற்றி ரகசியம் இதுவாகத் தான் இருக்கும். நமது இலக்கை நாம் தீர்மானிக்கவில்லை எனில், அடுத்தவரின் இலக்கிற்காக நாம் வேலையாட்களாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com