
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வாங்கியவர்களை பார்த்தால், அதில் தங்கப்பதக்கம் வாங்கியவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். வெண்கல பதக்கம் வாங்கியவர்கள் மூன்றாவது பரிசாவது கிடைத்தது என்று நிம்மதியாக இருப்பார்கள். ஆனால், இரண்டாவது இடமான வெள்ளி பதக்கம் வென்றவர்கள் முகத்தில் வருத்தம் தெரியும். பயங்கர சோகமாக இருப்பார்கள். ஏனெனில், இரண்டாவது இடம் என்பது அவ்வளவு வலி நிறைந்த இடமாகும்.
இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள், 'நமக்கு தங்கப்பதக்கம் கிடைக்காமல் போய்விட்டதே!' என்று மனவருத்தத்தில் இருப்பார்கள். இதை தான் 'சில்வர் மெடல் சிண்ட்ரோம்' என்று சொல்வார்கள். இதில் அவர்கள் இரண்டாவது இடம் கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையாமல், முதல் இடத்தை தவறவிட்டதை நினைத்து வருத்தப்படுவார்கள்.
I almost passed, i almost got the promotion என்று சொல்வதில் அவர்களின் வலி தெரியும். இதை பள்ளிக்காலத்தில் கூட நாம் அனுபவித்திருப்போம். நூறு மதிப்பெண் பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், 40 வாங்கி ஜஸ்ட் பாஸ் செய்தவர்கள் கூட நிம்மதியாக இருப்பார்கள். ஆனால், 98 மதிப்பெண் எடுத்தவர்கள் 100 மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தப்படுவார்கள்.
நம்மில் பலருக்கு இந்த Silver medal syndrome இருக்கிறது. நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை விட்டுவிட்டு நம்மை விட அடுத்தவன் அதிகமாக சம்பாதிக்கிறான், சந்தோஷமாக வாழறான்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருப்பாங்க. நாம் இங்கு இருக்கும் பலரை விடவே நல்ல நிலையில் தான் இருப்போம். ஆனால், அதைப்பற்றி எப்போதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
முடிந்துப்போனதை நினைத்து வருத்தப்படாமல் அடுத்தமுறை நன்றாக முயற்சி செய்து வெற்றியடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வதே சிறந்தது.
இதை புரிந்துக் கொள்வதின் மூலமாக நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் விதம், நம்முடைய மனஆரோக்கியம் போன்றவை அதிக அழுத்தமான தருணத்தில் எப்படி இருக்கும், அதை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக பாசிட்டிவான மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து நடந்ததை நினைத்து வருத்தப்படுவதை கைவிட வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. நம்மை நாமே பாராட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.