
உங்கள் சருமத்தைப் பொலிவாக்க அரிசி கஞ்சி, கிராம்பு, க்ரீன் டீ, க்ளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் போதும்.
தேவையானவை:
அரிசி - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 6
க்ரீன்டீ - 2 டேபிள் ஸ்பூன்
ஆலோவேரா ஜுஸ் - 2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடபிள் க்ளிசரின் - 2 டீஸ்பூன்
சுத்தமான தண்ணீர் ஒரு கப்
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வைத்து அரிசியை சேர்த்து அது குழைவானதும் கஞ்சியை வடித்து வைக்கவும்.
அரை கப் தண்ணீரில் கிராம்பு மற்றும் க்ரீன்டீ சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும்.
ஒரு பௌலில் குளிர்ந்த அரிசிகஞ்சி மற்றும் கிராம்பு க்ரீன் டீடிகாக்ஷனும் சேர்க்கவும். இதில் ஆலோவேரா ஜுஸ், க்ளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
இவற்றை நன்கு கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைக்கவும். இதை 5 - 7 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைதத் பின்பு முகத்தில் மசாஜ் செய்யவும்.
இதன் பயன்கள்:
அரிசிக் கஞ்சி சிறந்த நீரேற்றத்தைத் தந்து நல்ல டோனராக செயல்பட்டு முகத்தில் வறட்சியைப் போக்கி மென்மையாக்கும்.
கிராம்பில் உள்ள யூஜீனால் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் பெற்றுள்ளதால் முகம் பளிச்சென்று ஆகும்.
இதில் உள்ள க்ளிசரின் நல்ல நீரேற்றத்தைத் தந்து வறட்சியை நீக்கும். ஆலோவேரா அழற்சியை போக்குவதுடன் நல்ல நீரேற்றத்தையும் தரும்.
இதில் உள்ள ரோஸ் வாட்டர் அழற்சியை போக்கி இயற்கையில் நல்ல நிறத்தைத் தரும். மேலும் சிறந்த மணத்தையும் தரும்.
உங்களுக்கு கிராம்பு ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தும் என்றால் அதை குறைத்து பயன்படுத்தலாம். எந்த பக்க விளைவும் இல்லாத இயற்கை டோனர் இது.
பளபளவென்று சருமத்துக்கு காபி ஸ்க்ரப்
ஒரு ஸ்பூன் காபி பௌடர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது ஆலிவ் ஆயில் இவற்றை கலந்து முகத்தில் தடவி பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். காபி எக்ஸ்ஃபோலியேட் செய்யும், தேன் நீரேற்றத்தையும் ஆலிவ் ஆயில் பளபளப்பையும் தரும்.
காபி யோக்ஹர்ட் ஸ்க்ரப்
ஒரு ஸ்பூன் காபி பௌடர், இரண்டு ஸ்பூன் யோக்ஹர்ட் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவிக் கழுவ யோக்ஹர்ட்டின் லாக்டிக் அமிலம் பளிச்சென்ற தோற்றமும் காபி புத்துணர்ச்சியையும் தரும்.
காபி ஐஸ்க்யூப்
காபி டிகாக்ஷனை ஐஸ் ட்ரேயில் குளிர் வைத்து ஐஸ்கட்டியாக்கவும். ஒரு மென்மையான துணியில் இதை சுற்றி முகத்தில் மசாஜ் செய்யவும் முகத்தின் வீக்கம் நீங்கி பொலிவாக்கும்.
காபி பாலிஷ்
காபி பௌடர், 2 டேபிள் ஸ்பூன் ப்ரௌன் சீனி, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் உடல் முழுக்க வட்டவடிவில் தடவுங்கள். பிறகு 15 நிமிடங்கள் கழித்துத் குளிக்க உடல் முழுவதும் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உணர்வீர்கள்.