உண்மையான சந்தோஷம் என்பது எது தெரியுமா?

motivation image
motivation imageImage credit ; pixabay.com

ன் உறவினப் பெண் ஒருத்தி லீவு என்று வந்துவிட்டால் உடனே புறப்படுவது அண்ணி வீட்டுக்குத்தான். அண்ணி வீடு என்றால்? அண்ணன் வீடுதான். அதையே அண்ணி வீடு என்று சொல்வதில் தான் அவளுக்கு பெருமிதம். அப்படி என்ன அதில் அதிசயம் என்கிறீர்களா? அதைப் பற்றிய பதிவை இதில் காண்போம். 

அண்ணி வீட்டுக்குச் சென்றால் அண்ணி சமைப்பதை வேடிக்கை பார்ப்பதே அவளுக்கு பெரிய சந்தோசமாக இருக்கும். ஏனெனில் அவர் சமைப்பது அனைத்தையும் இவளுக்கு சொல்லித் தருவார். எல்லா ரெசிபிகளையும் எப்படி சமைப்பது என்று அருகில் நிற்கச் சொல்லி அவ்வப்பொழுது சில டிப்ஸ்களை தருவார். அது இவளுக்கு மிகவும் பிடித்துப் போகும். அதிலிருந்து பல்வேறு குறிப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்வாள். சில நேரங்களில் இவளை சமைக்க விட்டு ருசி பார்த்து நன்றாக இருந்தால் சூப்பர் என்று மோட்டிவேட் செய்வார். குறைகள் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று சொல்லித் தருவார். கோபமே படமாட்டார். இதுதான் அவளுக்கு பிடித்தது.

ஆனால் அதே அவள் அக்கா வீட்டிற்கோ சித்தி விட்டிற்கோ சென்றால் போன வேகத்தில் திரும்பி விடுவாள். ஏனெனில் அவர்கள் சமைப்பதை வேடிக்கை பார்த்தால் சமையல் ருசி வராது  என்று கூறி அருகில் நிற்க வைத்து கொண்டு சமைக்க மாட்டார்கள். சமையலை எட்டிப் பார்த்தால் கூட வேறு வேலையை இவளிடம் கொடுத்து கிச்சனில் நுழையாதபடி செய்து விடுவார்கள்.

மேலும் சமையல் ருசியாக இருந்தால் இதில் என்னென்ன சேர்த்தீர்கள் வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டால், அந்த சீக்ரெட்டை சொல்லித்தர மாட்டார்கள். ஏனெனில் அதை இவள் கற்றுக்கொண்டு இன்னும் கொஞ்சம் டேஸ்டாக செய்துவிட்டால் அவர்களின் புகழ் மங்கி விடுமாம். தனக்குத் தெரிந்ததை தான் மட்டுமே ரகசியமாக வைத்துக் கொள்வதில் அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சி. 

இதையும் படியுங்கள்:
சூரிய ஒளி எனும் மருந்தின் மகத்துவம் தெரியுமா?
motivation image

இந்த உறவுகளில் இப்படி ஒரு வேறுபாடு இருப்பதால்  அவள் அண்ணியை அதிகம் விரும்புவாள். அதேபோல் இவள் சமையலிலோ, வீட்டின் அலங்காரப் பொருள்களை மாற்றி வைத்து அழகுபடுத்துவதில் ஏதாவது சின்னஞ்சிறு குறைகள் செய்தால் கூட அதை பெரிதுபடுத்திக்கொள்ள மாட்டார் அண்ணி. அதை ரசிப்பார். இது ஒரு மாற்று சிந்தனை. இதிலிருந்து இந்தப் பொருட்களை இப்படியும் வைக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன் என்று தட்டிக் கொடுப்பார்.

மோட்டிவேஷன்  என்பது பெரிய பெரிய விஷயங்களுக் கானது மட்டுமல்ல. இது போன்ற அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்துதான். இது மாதிரியான மோட்டிவேஷன்தான் பெரிய பெரிய காரியங்களை செய்யும் பொழுது தடுமறாமல் தாங்கிப் பிடிக்கும். ஆதலால் இந்த விடுமுறை தினங்களில் வீட்டிற்கு வரும் உறவினப் பெண்கள் இதுபோல் அடுக்களைக்குள் நுழைந்தாலோ, அலங்காரங்களில் மாற்றம்  செய்தாலோ அதையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் உள்ள விஷயங்களை தானும் கற்றுக்  கொண்டால்  அதனால் அடையும் இன்பத்திற்கு கேட்கவா வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com